0:00 கும்ப ராசி நேயர்களுக்கு வணக்கம். மார்ச் 6, 2026 ஆம் தேதிக்கு பிறகு உங்கள் வாழ்க்கையிலே ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்க போகிறது என்று நான் சொல்லியிருந்தேன். இது நூற்றுக்கு 100% உண்மை. நவகிரகங்களில் கர்ம வினை பயனை அளிப்பவர் என்றும் நீதிமான் என்றும் அழைக்கப்படுபவர் சனி பகவான். உங்கள் ஜாதகத்தில் மிக உயரிய அதிகாரம் கொண்டு அதாவது சுப்ரீம் பவர் கொண்ட கிரகம் இதுதான். தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனி பகவான் மார்ச் ஆறாம் தேதிக்கு பிறகு ஒரு விசேஷமான நிலையை ஏற்றுகிறார். இந்த காலகட்டத்தில அவர் 100 மடங்கு அதிக வலிமை பெற்று உங்களுக்கு அருள் பாலிக்க போகிறார். பொதுவாக சனி பகவான் என்றாலே பயப்படுபவர்கள் அதிகம். ஆனால் உண்மையில் அவர் ஒருவருக்கு கொடுக்க ஆரம்பித்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அவர் உங்கள் ராசிநாதனாகவே இருப்பதால் மார்ச் ஆறாம்
0:47 தேதிக்கு பிறகு கிடைக்கப்போகும் பலன்கள் உங்களுக்கு சனி பகவான் வழங்கும் ஒரு மிகப்பெரிய பரிசாக அமைய போகிறது. மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் என்னென்ன பெரிய நன்மைகளை உங்களுக்கு வாரி வழங்க போகிறார் என்பதை நாம் இப்பொழுது விரிவாகவும் ஆழமாகவும் தெரிந்து கொள்வோம். கும்ப ராசி நேயர்களை பொறுத்தவரை சனி பகவான் உங்கள் ராசிநாதன் மற்றும் 12 ஆம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். உங்கள் உடல் குணம் ஆயுள் மற்றும் உங்கள் செலவுகள் தூக்கம் மோட்சம் ஆகியவற்றை தீர்மானிக்கும் மிக முக்கியமான கிரகம் அவர்தான். வாக்கிய பஞ்சாங்கப்படி மார்ச் 6, 2026 முதல் மீன ராசிக்குள் தனது பிரவேசத்தை தொடங்குகிறார். கும்ப ராசிக்கு இது இரண்டாம் இடமாகும். இதை பாதச்சனி என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடும்
1:32 என்றாலும் ஜென்ம சனியின் பிடியிலிருந்து நீங்கள் முழுமையாக விடுதலை பெறுவதால் இது ஒரு மிகப்பெரிய நிம்மதியை தரும் காலமாகும். கடந்த சில ஆண்டுகளாக உங்கள் ராசியிலே அமர்ந்து உங்களை சோதித்து மன அழுத்தம் உடல் உபாதைகள் மற்றும் காரிய தடைகளை வழங்கிய சனி பகவான் இப்பொழுது தன ஸ்தானத்திற்கு நகர்வது ஒரு மிகப்பெரிய ராஜயோகமாக மாறப்போகிறது. உங்கள் தம்னைலில் நான் குறிப்பிட்டது போல இந்த மார்ச் ஆறு மாற்றத்திற்கு பிறகு ஒரு ரகசிய உயில் உங்களை தேடி வரப்போகிறது. அது உங்கள் முன்னோர்கள் வழி வந்த சொத்தாக இருக்கலாம். அல்லது நீங்கள் செய்த ஏதோ ஒரு பழைய புண்ணியத்திற்காக யாரோ ஒருவர் உங்களுக்கு எழுதி வைத்த உயிலாகவும் இருக்கலாம். அந்த சொத்து உங்கள் கைக்கு வந்த பிறகு உங்களின் பொருளாதார நிலை 2050 வரை தடையின்றி உச்சத்தை அடையப்போகிறது. பணம் உங்கள்
2:18 கைகளில் புரளப்போகும் ஒரு மகா யோகத்திற்கு நீங்கள் இப்பொழுது தயாராக வேண்டும். சனி பகவான் இப்பொழுது அமரப்போகும் மீன ராசி அவருக்கு ஒரு நட்பு வீடாகும். குருவின் வீட்டில் அமரும் சனி பகவான் உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார். அவர் இரண்டாம் இடத்தில் அமர்ந்து கொண்டு அங்கிருந்து தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசியின் முக்கிய இடங்களை பார்க்க போகிறார். முதலாவது இந்த மார்ச் ஆறு மாற்றத்தினால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய முதல் தகுதி என்னவென்றால் பிரம்மாண்டமான தன லாபம் மற்றும் குடும்பத்திலே மகிழ்ச்சியான சூழலாகும். இரண்டாம் இடம் என்பது தனம் வாக்கு மற்றும் குடும்பத்தை குறிக்கும். சனி பகவான் இங்கே அமரும்பொழுது நீண்ட காலமாக சட்டச்சிக்கலில் அல்லது வாரிசுரிமை விவாதத்தில் இருந்த ஒரு உயில் அல்லது பெரிய சொத்து ஒப்பந்தம் இப்பொழுது
3:03 உங்களுக்கு முழுமையாக சாதகமாக முடியும். இதன் மூலம் கிடைக்கப்போகும் அந்த ரகசிய செல்வம் வரும் 2050 வரை உங்களை ஒரு பொருளாதார சாம்ராஜ்யத்தின் அதிபதியாக நிலைநிறுத்தும். பூமி மனை தங்கம் என்று நீங்கள் எதை வாங்க விரும்பினாலும் உங்களின் அந்தஸ்தை உயர்த்தி தரும் பொறுப்பை சனி பகவான் ஏற்றுக் கொள்கிறார். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இதுவரை இருந்த ஏழ்மை நிலை அல்லது பண பற்றாக்குறை இனி இருக்காது. உங்களை மதிக்காதவர்கள் கூட உங்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதை பார்த்து வியப்படைவார்கள். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் கண்ணியமும் பிறக்கும். உங்களுக்கு தேடி வரும் இந்த உயில் யோகம் உங்கள் குடும்பத்தின் கௌரவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அடுத்ததாக சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் மதிப்பு பல மடங்கு
3:49 உயரப்போகிறது. மார்ச் ஆறாம் தேதி முதல் பொதுமக்களிடமிருந்து அல்லது உங்கள் தொழில் துறையில் இருப்பவர்களிடமிருந்து திடீரென்று உங்களுக்கு புகழும் மதிப்பும் கிடைக்க ஆரம்பிக்கும். ஏனெனில் இரண்டாம் இடத்தில் வலிமை பெற்ற சனி பகவான் ஒருவருக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியையும் குடும்பத்தில் செல்வாக்கையும் வழங்குவார். இதுவரை உங்களை பகைத்துக் கொண்டவர்கள் கூட இப்பொழுது உங்கள் முன்னேற்றத்தை கண்டு வாயடைத்து நிற்பார்கள். அதேபோல் குடும்ப ரீதியாக பார்த்தால், உங்கள் வாழ்க்கை துணையின் மூலம் வரும் யோகங்கள் அல்லது அவர்கள் வழியில் வரும் சொத்துக்கள் உங்களுக்கு பெரிய பலமாக இருக்கும். ஒருவேளை பூர்வீக சொத்து சம்பந்தமாக ஏதேனும் விவாதங்கள் இருந்து வந்தால் மார்ச் ஆறக்கு பிறகு அந்த சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறி அந்த பெரிய தொகை உங்கள் கைக்கு வந்து சேரும்.
4:34 மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் சனி இரண்டாம் இடத்தில் இருக்கும்போது உங்கள் வாக்குக்கு வலிமை கூடும் என்பதால் சுடு சொற்களை தவிர்க்கவும். யார் ஏதாவது சொன்னாலும் நீங்கள் அமைதியாக இருந்து காரியத்தை சாதிப்பது உங்களுக்கு பெரிய நன்மைகளை தரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கும்பராசி நேயர்கள் இந்த காலகட்டத்திலே ஒரு புதிய பிறவி எடுத்தது போல உணர்வீர்கள். ஜென்ம சனியின் காலம் முடிவடைவதால் உங்கள் தலை மற்றும் உடல் பகுதிகளில் இருந்த பாரம் சோர்வு மற்றும் நீண்ட கால நோய்கள் அனைத்தும் அடியோடு மறையும். சனி பகவான் இரண்டாம் இடத்திற்கு நகர்வதால் உங்கள் கண் பார்வை மற்றும் பல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கவனிக்கவும். நீண்ட நாட்களாக மருத்துவ் செலவுகளால் அவதிப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் சீராகி அந்த செலவுகள் முழுமையாக குறையும். இருப்பினும் காரமான
5:22 உணவுகளை குறைத்து சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். பழைய சோறு, மோர், தயிர் போன்ற பாரம்பரிய உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும். உடல் உழைப்பு அல்லது யோகா செய்வதை ஒரு வழக்கமாக மாற்றி கொள்ளுங்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு சிந்திக்கும் திறன் அதிகம். எனவே தினமும் தியானம் செய்வது உங்கள் மன உறுதியை அதிகரித்து தெளிவான முடிவுகளை எடுக்க உதவும். பெண்களுக்கு தைராய்டு அல்லது முகப்பொலிவு சார்ந்த உபாதைகள் இருந்தால் இப்பொழுது அதிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். சரியான ஓய்வு உங்கள் மூளைக்கு கூடுதல் பலம் தரும். பொருளாதார ரீதியாக பார்த்தால் இதுவரை இருந்த முடக்கங்கள் மற்றும் வருமான பாதிப்புகள் மார்ச் ஆறுக்கு பிறகு படிப்படியாக முழுமையாக மாறும். நீங்கள் நீண்ட காலமாக தீர்க்க முடியாமல் இருந்த
6:07 கடன் உபத்திரவங்களில் இருந்து வெளியே வர ஒரு புதிய வழி அல்லது ரூட் பிறக்கும். அந்த ரூட்டை கரெக்டா பிடிச்சிட்டு கடன்ல இருந்து வெளியில வந்துடனும். உங்கள் தம்னைலில் சொன்னது போல 2050 வரை பணம் புரள போகும் அந்த அமைப்பு உங்களுக்கு ஒரு புதிய தொழில் அல்லது பெரிய முதலீடு மூலம் அமைய போகிறது. நீங்கள் ஒரு பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய வீடு அல்லது நிலம் வாங்க நினைத்தால் அதற்கு இது மிகவும் ஏற்ற காலம். 10 வருடங்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இப்போது சட்டென்று முடியும். குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்கக்கூடிய ஒரு நிம்மதியான சூழலை சனி பகவான் ஏற்படுத்தி கொடுப்பார். சேமிப்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் ஆர்வம் உங்கள் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்யும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். வங்கி சேமிப்பு மற்றும்
6:53 தங்கம் மீதான முதலீடுகள் உங்களுக்கு பிற்காலத்தில் பெரிய லாபத்தை தரும். சனி பகவானின் பார்வைகளுக்கு எப்பொழுதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவர்தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து மூன்றுஏழு மற்றும் பத்தாம் இடங்களை பார்க்கிறார். மார்ச் ஆறிற்கு பிறகு அவரது பார்வையின் பலன்கள் கும்ப ராசிக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம். அவரது மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுகஸ்தானத்தின் மீது விழுகிறது. இது உங்கள் சொத்து யோகத்தை உறுதிப்படுத்துகிறது. புதிய வீடு அல்லது வாகனங்கள் வாங்கும் கனவு இப்போது நனவாகும். தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை புதுப்பிக்கும் யோகம் உண்டாகும். இது உங்கள் குடும்ப வசதிகளை அதிகரித்து 2050 வரையிலான செல்வ யோகத்தை உறுதிப்படுத்தும். அடுத்ததாக சனி பகவானின்
7:38 ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான ஆயுல் மற்றும் மறைபொருள் ஸ்தானத்தின் மீது விழுகிறது. இது உங்களை ஒரு மிகவும் அதிருஷ்டசாலியாக மாற்றும். நீங்கள் எதிர்பார்க்காத ஒரு உயில் அல்லது இன்சூரன்ஸ் தொகை அல்லது பழைய முதலீடுகள் இப்பொழுது லாபத்துடன் உங்கள் கைக்கு வரும். இது ரகசியமாக தேடி வரும் செல்வத்திற்கான யோகத்தை உறுதிப்படுத்தும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து ரகசியமான கலைகளை கற்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாபஸ்தானத்தின் மீது விழுகிறது. இது உங்களின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும். இதுவரை வேலையில் அல்லது தொழிலில் இருந்த தடைகள் நீங்கி லாபம்
8:24 கொளிக்கும். மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உங்களுக்கு பெரிய உதவிகள் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் அனைத்தும் இப்பொழுது நிறைவேறும். உங்களின் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்து சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். இது உங்களின் நீண்ட கால திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த உதவும். வேலையை பொறுத்தவரை மார்ச் ஆறாம் தேதிக்கு பிறகு உங்கள் தொழில் துறையில் நீங்கள் ஒரு மிகப்பெரிய எழுச்சியை காண்பீர்கள். சனி பகவான் உங்கள் ராசிநாதனாக இருப்பதால் உங்கள் வேலையில் ஒரு நல்ல நிதானமும் பொறுப்பும் உண்டாகும். இதுவரை வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கி புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். நீங்கள் ஒருவேளை வேலையை மாற்ற விரும்பினால் இப்போது முயற்சி செய்யுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல சம்பளத்துடன் உயரிய வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். சனி பகவானின் அருளால் உங்கள் வியாபாரத்தில்
9:10 ஒரு பெரிய முதலீடு தேடி வரும். தேங்கி கிடந்த சரக்குகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். எங்கோ சிக்கியிருந்த உங்கள் பணம் வட்டியுடன் வசூலாகும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு உங்கள் தொழிலில் பயன்படுத்துவது உங்களுக்கு பெரிய வளர்ச்சியை தரும். வெளிநாடு தொடர்பான வியாபாரங்கள் அமோக லாபத்தை தரும். சனி பகவானின் இந்த மாற்றத்தால் உங்கள் நீண்ட கால கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகும். 2050 வரை நீங்கள் பொருளாதார பேரரசாக திகழ் சனி பகவான் வழிவகுப்பார். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். குறிப்பாக உயர்கல்விக்காக காத்திருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்க விரும்புபவர்கள் அல்லது அங்கு கல்வி பயிலை நினைப்பவர்களுக்கு இந்த மார்ச் ஆறிற்கு பிறகு ஒரு நல்ல செய்தி நிச்சயம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள்
9:56 உங்களுக்கு லாபகரமாக அமையும். தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். இது உங்கள் கர்ம வினைகளை குறைக்கும். கலைஞர்களுக்கு பாராட்டும் பணமும் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சட்டரீதியான சிக்கல்களில் சிக்கி தவிப்பவர்களுக்கு நிம்மதியான தீர்வுகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் இப்போது இரட்டிப்பு பலனை தரும். பரிகாரங்களை பொறுத்தவரை மாதத்திற்கு ஒரு நாள் முருகன் கோயிலுக்கு சென்று வருவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைப்பதும் ஏழை எளியவர்களுக்கு அல்லது துப்புறவு தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானம் செய்வதும் சனியின் தாக்கத்தை குறைத்து நன்மைகளை தரும். பசுவிற்கு அகத்தி கீரை அல்லது வாழைப்பழம் கொடுப்பது உங்களுக்கு தடையில்லாத பணவரவை தரும். தியானம் மற்றும் யோகா செய்வது உங்கள் மன
10:42 உறுதியை அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது உங்கள் குடும்பத்தை காக்கும் கவசமாக அமையும். ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமன் வழிபாடு செய்வது உங்களுக்கு மிகுந்த மன தைரியத்தை கொடுக்கும். சிவன் கோயிலில் நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவிப்பது உங்கள் காரியத்தடைகளை நீக்கும். ஒரே ராசியிலே கோடிக்கணக்கான மக்கள் இருக்கும்பொழுது அனைவருக்கும் இந்த சமமான பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் வரலாம். உங்க ஜாதகத்தை எடுத்து பாருங்கள் உங்கள் லக்னத்தில் இருந்து கணக்கிடும் போது சனி பகவான் வலிமையாக அமர்ந்திருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் அவர் நீச நிலையில் இல்லாமல் இருந்தால் நான் சொன்ன ஒவ்வொரு பலனும் உங்களுக்கு உண்மையாக நடக்கும். சனி பகவான் உங்களுக்கு சகல செல்வங்களையும் மன அமைதியையும் நீண்ட ஆயுளையும் வழங்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். மார்ச்ஆறு முதல்
11:29 உங்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மற்றுமொரு புதிய தகவலுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.