0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுத்துட்டு இருக்கோம்ன்ற நம்பிக்கையிலதாங்க நான் அடுத்தடுத்த பதிவுல கொடுத்துட்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி உங்களுடைய அன்பும் பேராதரவும் இன்னைக்கு நம்ப 1 மில்லியன் சந்தாதாரர்களை தாண்டி வெற்றி நடை போட்டுட்டு இருக்கறோம்னா எல்லாத்துக்குமே நீங்கதான் காரணம். அந்த வகையில இந்த பதிவு மகர ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. இந்த ஆவணி மாதத்துல செப்டம்பர் மாதத்துல ஒவ்வொரு மாதமும் ஆரம்பிக்கும் போது நம்மகிட்ட நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. ஏன் இந்த வருஷம் 2025 ஆரம்பிக்கும் போதே பல கனவுகளோடதான் ஆரம்பிச்சது. ஆனா ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போது பல கனவுகளோட ஆரம்பிச்சாலும் அந்த வருடம் ஆரம்பமான சில மாதங்களிலேயே நம் மனதில் தோன்றக்கூடியது
0:48 என்னன்னா அது போன வருஷமே பரவாயில்லை அப்படின்ற ஒரு மைண்ட்செட் வரும். ஏன்னா மகர ராசிக்காரர்கள் உண்மை சொல்லணும்னா பல பதிவுகள்ல சொல்லிட்டோம். படாத பாடுபட்டு கஷ்டப்பட்டு துயரப்பட்டு இன்னைக்கு இனிமே நம்ம லைப் மாறும்ன்ற நம்பிக்கையில வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனி பகவானுடைய தாக்கத்தில இருந்து வெளியே வந்துட்டாலும் அந்த நேரத்தில பட்ட இண்ணல்களும் வேதனைகளும் மன கசப்புகளும் இன்னுமே இவங்களை விட்டு விலகாம இவங்களை சுத்திக்கிட்டேதான் இருக்கு. என்ன நடக்கப்போகுது இந்த செப்டம்பர் மாதம் என்ன மாதிரி பலன்களை இந்த கிரக நிலைகளுக்கு கொடுக்க போகுது அதையும் தாண்டி இந்த பிரபஞ்சம் என்னெல்லாம் உங்களுக்கு நல்லது கொடுக்க போகுது அப்படின்றது எல்லாத்தையும் இந்த பதிவுல நம்ம ஸ்கிப் பண்ணாம பாக்குறங்க முழுமையா பார்த்து தெரிஞ்சுக்கோங்க பாக்குறதுக்கு முன்னாடி இந்த பதிவுகளை போலவே இந்த மூலிகை சாம்பிராணி உங்களுக்கு நல்லது
1:33 கொடுக்கும்னு நான் நம்புனேன் அது நடந்துருச்சு இன்னைக்கு எல்லாருடைய வீட்டிலும் நமது மூலிகை சாம்பிராணி கெட்ட அதிர்வலைகளை விளக்கிட்டு நல்ல அதிர்வலைகளை வீடாகட்டும் தொழில் செய்யக்கூடிய இடமாகட்டும் ரெண்டு இடத்திலயுமே அந்த நல்ல அதிர்வலைகள கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி புதுசா ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க 9345397967 இந்த WhatsAppட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி உங்களுடைய ஆர்டர் வந்து கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. சரி இப்ப மகர ராசிக்காரர்களுக்கு முதல்ல இந்த ஆவணி மாதத்தில் செப்டம்பர் மாதத்தில் எதிர்பார்க்கக்கூடிய மாற்றங்கள் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நல்லா தெரிஞ்சுக்கோங்க. நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகக்கூடிய ஒரு காலகட்டமா இருக்கப்போகுது. சரிங்களா உங்களுடைய குழந்தைகள் மூலமாக சில நல்ல விஷயங்கள் காதுக்கு வர வேண்டிய ஒரு காலமாவும்
2:20 இருக்கு. பதற்றத்தை பதற்றம் இன்னுமே இந்த பதற்றம் இருந்துகிட்டேதான் இருக்கு மகர ராசிக்காரர்களுக்கு ஆமா ஏன்னா நம்ம பல பதிவுகள்ல இவர்களை பத்தி ஒரே வார்த்தையில சொல்லி இருக்கோம். வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற நபர்கள் தான் இந்த மகர ராசிக்காரங்க. எல்லாருமே நம்மள மாதிரின்னு நினைச்சு நினைச்சு நினைச்சு நினைச்சு ஒவ்வொரு சூழ்நிலையும் நம்மள மாதிரி யாருமே இல்ல அப்படின்றத உணர்த்திக்கிட்டே இருக்கும் இவங்களுக்கு லைப் ஃபுல்லா வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு சூழ்நிலை ஒவ்வொரு சூழ்நிலையும் மற்றவர்கள் யார் என்பதை இந்த மகர ராசிக்காரர்களுக்கு இந்த சூழ்நிலை உணர்த்திக் கொண்டே இருக்கும். அதுதான் உங்க வாழ்க்கையில அடுத்து நீங்க எடுக்கக்கூடிய முடிவுகளும் முயற்சிகளுக்குமான ஒரு முதலீடு அதுதான். ஏன்னா குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு நம்ம ஆல்ரெடி
3:05 சொல்லி இருக்கோம். கும்பம் மகரம்னு சொல்லி சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அவருடைய வாழ்க்கையில நடந்த அந்த அனுபவங்கள் தான் அவங்கள் வாழ்க்கைக்கான முதலீடு. பணம் காசு அப்புறம் அதெல்லாம் அப்புறம் முதல்ல தனக்கு நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்தில் கிடைக்கக்கூடிய அனுபவத்தை வச்சுதான் அடுத்தடுத்த ஒரு நல்ல விஷயங்களை இவங்களால கையில பிடிக்க முடியும். ஏன்னா இவங்களுக்குன்னு சில விதிமுறைகள் கண்டிப்பா இவங்கஃபாலோ பண்ணனும். பண்ணாதான் அது அடுத்த கட்ட நல்லத தேடி அந்த இடத்தை அடையும் முடியும். அப்படி பாத்தோம்னா மகர ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு இந்த காலகட்டம் ஒன்றன் பின் ஒன்றாக மாற்றத்திற்கான விஷயங்களை எதிர்கொள்ளக்கூடிய நேரம் என்னங்க அப்படின்னு சொல்லி கேட்டா ஆமா அதாவது வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீடு மாறுவதற்கு உண்டான எண்ணங்கள்
3:52 உதிக்கக்கூடிய நேரம். அதேபோல வேலையில இருக்கக்கூடிய நபர்கள் பெரும்பாலும் பாத்தீங்கன்னா அந்த சக ஊழியர்களிடம் கோபப்படுவதையும் கடுமையான சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டிய நேரம் ஏன்னா மகர ராசிக்காரங்க கடந்த பல வருடமா அந்த சனிபகவான் தாக்கத்தில பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் இன்னைக்கு வந்து நிறைய பேர் வெறுக்க வச்சிருச்சு ஆமா மகர ராசிக்காரர்கள் நிறைய பேர் வெறுத்துருப்பாங்க என்னப்பா மனிதர்கள் அப்படின்னு சொல்லி அதனாலயே யாராவது இப்பல்லாம் பேசினாவே அவங்களுக்கு கோவம் தான் வரும் என்ன தேவை என்ன விஷயம் அதை மட்டும் சொல்லுங்க அப்படின்னுதான் பேசுவாங்களே ஒழிய பழைய மாதிரி எல்லாம் உட்கார்ந்து பொறுமையா நிதானமா கேட்கக்கூடிய அந்த நிதானம் பொறுமை இப்ப இல்லை சரிங்களா ஆனா கண்டிப்பா அந்த நேரம் அந்த நிதானம் பொறுமை தேவை
4:40 குருவின் பார்வை 12 ஆம் இடத்தை பார்ப்பதால சுபவிரயம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய சூழல் கண்டிப்பா ஏற்படும். ஆனா எந்த ஒரு வாக்கு கொடுக்கறதுக்கு முன்னாடியும் நல்லா யோசிச்சுக்கோங்க. ஏன்னா கடந்த சில காலகட்டத்திலேயே நீங்க சொன்ன விஷயங்களை சொன்ன நேரத்துக்கு சரியா முடிக்க முடியாம சில அவப்ப பெயர்களையும் கெட்ட பெயர்களும் உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும். இதுல இந்த மகர ராசிக்காரர்களுக்கு கொடுமை என்னன்னு கேட்டா நல்லது நினைச்சு நல்லது பண்ண போய் நல்லது பேச போயி கடைசியா கெட்ட பேரை வாங்கிட்டு வந்துருவாங்க. அதுதான் வந்து இவங்களுடைய மனதுல ரொம்ப ஒரு வலியை ஏற்படுத்தக்கூடிய விஷயமா இருக்கும். இவங்களே சில நேரங்கள்ல நினைப்பாங்க நல்லதுதான்ப்பா சொல்ல போனோம். நல்லதுதான்ப்பா பண்ண போனோம். நமக்கு ஏப்பா
5:26 இந்த பேரு அப்படின்ற மாதிரி எல்லாம் சில சூழ்நிலைகள் இவர்களுக்கு உணர்த்தி இருக்கும். அதனாலதான் இவர்கள் ஜாதக இவர்களுடைய ராசியில பிறந்தவரடைய ஜாதகத்தை பார்க்கும் போதும் சரி இந்த மகர ராசிக்காரர்களுக்கான கணிப்புகளை நம்ம இந்த மாதிரி ஆன்லைன்ல கொடுக்கும் போதும் சரி சொல்லக்கூடிய ஒரே ஒரு விஷயம் உங்களை மாதிரியே எல்லாரும் நினைச்சு நினைச்சு தொடர்ந்து ஏமாற்றத்தை சந்திக்காதீங்க உங்களுக்கான சில நபர்களும் இருப்பாங்க லைஃப்ல ஆனா அது எல்லாருக்கும் அமையுமான்னு கேட்டா அதுதான் சந்தேகம். சரிங்களா இந்த காலகட்டம் புதிய தொழில் தொடங்குறதுக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். இனியும் நேரத்தையும் காலத்தையும் வீண் பண்ண வேண்டாம். இந்த நேரம் இந்த இடம் நமக்கானது அப்படின்ற எண்ணம் அதிகமா உதிக்கக்கூடிய நேரம். புதிய தொழில்களை தொடங்குறதுக்கு முன்னாடி உங்களுடைய சுயாதகம் இந்த காலகட்டம் இந்த தொழிலுக்கான அமைப்பு
6:11 எப்படி இருக்குன்றதையும் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். ஏன்னா அஷ்டமத்தில சூரியனும் கேதுவும் இருப்பதால படபடப்பு இருக்கும் கண்டிப்பா. எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் இது சரியா முடியுமா? இத கரெக்டா நம்ம சக்சஸ் பண்ணிருவோமா? இல்ல லாபம் வருமா இல்ல நஷ்டம் ஆயிடுமா அப்படின்ற பல கேள்விகளை உங்களை தொலைச்சு எடுத்துட்டு இருக்கும். இதனாலயே பாத்தீங்கன்னா இந்த மன அழுத்தம் தூக்கமின்மை பசிக்காம இருக்கிறது இது எல்லாமே இந்த மகர ராசிக்காரர்கள் லைஃப்ல பார்த்துட்டு இருக்கக்கூடிய கரண்ட் சிச்சுவேஷன். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகர் வழிபாடு, அம்மன் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு. இந்த மூன்று வழிபாடும் செய்வது நல்ல ஒரு கேட்டதை கொடுக்கக்கூடிய ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்தி கொடுக்கும். மனநிம்மதியும் மன அமைதியையும் ஏற்படுத்தி கொடுக்கும். குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். இந்த
6:58 செப்டம்பர் மாதத்தில வியாழக்கிழமை வார வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யங்க. இது உங்களுக்கு வேலை ரீதியாவும் வருமான ரீதியாவும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஏன்னா விட்டதை பிடிக்கக்கூடிய நேரமாதான் இது இருக்கப்போகுது. இவ்வளவு நாள் இழந்த விஷயங்களுக்கான திரும்ப பெறுவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியா நினைச்சுக்கணும். மனசை அதையும் இதையும் நினைக்க விட்டு குழப்பம் அடைஞ்சு உட்கார்ந்துரக்கூடாது. இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்கள் யாரெல்லாம் கடந்த கால நிகழ்வுகள்ல சோதனையையும் கஷ்டத்தையும் வேதனையையும் கொடுக்கக்கூடிய விஷயங்களை இன்னுமே மனசுல போட்டு குழப்பிட்டு இருக்காங்களோ, அவங்களால இனி வரக்கூடிய காலத்திலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாறி விடுவார்கள். ஆகையால நடந்தது நடந்து போச்சு. இனி நம்ம நடக்கக்கூடியதற்கான நல்லதை எதிர்பார்க்கறது்கான மனிதனாதான் நம்ம மாறணும். அப்ப மகர
7:43 ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலங்கள் யாவும் நல்லதே வந்து சேரும். இப்ப நம்ம சொன்ன இந்த எல்லா விஷயத்தையுமே மைண்ட்ல ஃபாலோ பண்ணுங்க. குறிப்பா வேலை செய்ற இடத்துல வாக்குவாதங்கள் வேண்டாம் கோபத்தை காட்ட வேண்டாம். நிதானம் பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம். சரிங்களா பேச வைப்பாங்க. கோபப்பட வைப்பாங்க. கத்த வைப்பாங்க அது எல்லாமே பண்ணுவாங்க ஆனா நம்ம கண்ட்ரோலா இருக்கணும் ஏன்னா நீங்க இங்க நியாயத்தையே பேசினாலும் சரியான விஷயத்தையே பேசினாலும் தவறு உங்க மேலதான் அப்படின்னு கொண்டு வரக்கூடிய சில நபர்கள் உங்களை சுத்தி இருக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு அது வேலை செய்யற இடமா இருந்தாலும் சரி வெளிய வட்டாரமாக இருந்தாலும் சரி ஆகவே கவனமாக இருந்து முன்னேற்றத்திற்கான வழிகளை கையில பிடிக்க வேண்டிய ஒரு நேரம் சரிங்களா
8:28 குருவுடைய பார்வை நம்ம சொன்ன மாதிரி 12 ஆம் இடத்துல இருப்பது உங்களுக்கு விரயத்தை சுப விரயத்தை ஏற்படுத்தினாலும் மனநிம்மதியை ஒரு பக்கம் கொடுக்கும் கண்டிப்பா. தொழில் ரீதியான நல்ல அனுகூலங்களை பெறுவதற்கான இனிமையான சூழல் ஏற்படும். ஆகவே நல்லதே நடக்கும் கவலைப்பட வேண்டாம். இந்த பதிவை மகர ராசிக்காரர்கள் உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலுடைய நிந்திருங்க. சப்ஸ்கிரைப் பண்ணாத நண்பர்கள் உடனுக்குடனே சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. நீங்க கொடுக்கக்கூடிய அன்பும் ஆதரவும்தான் இன்னைக்கு தொடர்ந்து நம்ம இவ்வளவு பதிவுகள் போட்டு எல்லாருக்குமே கடல் கடந்து பல வெளிநாடுகளிலும் நமது தொடர்ந்து பார்க்கக்கூடிய பார்வையாளர்கள் இருக்காங்க ஏன்னு கேட்டா எல்லாருமே நல்லதை தேடக்கூடிய நபர்கள் நல்லதை பார்க்கணும் நல்லதை பேசணும் தனக்குன்னு கடவுள் கொடுத்த இந்த ஒரு வாழ்க்கை ஒரு வாய்ப்பாதான் பார்கறாங்க
9:13 எல்லாருமே இது ஒரே ஒரு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை ஒரே ஒரு வாய்ப்பு அந்த ஒரு வாய்ப்பை எப்படி எல்லாம் நம்ம சரியா அமைச்சுக்கணும் எந்தெந்த இடத்துல நம்ம ரொம்ப சூதானமா இருக்கணும் கவனமா இருக்கணும் எந்தெந்த நபர்களிடம் நேரத்தை வீணாக்க கூடாது இதை எல்லாமே கண்டிப்பா நம்ம தெரிஞ்சுக்கிட்டா மட்டும்தான் முழுமையான ஒரு வெற்றிக்கான வாழ்க்கையை நம்ம உருவாக்க முடியும் சரிங்களா ஆகவே இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இறைவனுடைய அருளால இனி வரக்கூடிய காலங்கள் யாவும் சுபமாக அமையும் அப்படின்னு நான் நம்புறேன் இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி கண்டிப்பா உங்களையும் வந்து சேரும் நீங்களும் ஒரு மேக்னெட் மாதிரி மாறுவீங்க எப்படி காந்தம் வந்து இரும்பை இழுக்குதோ அதுபோல நல்லதை ஈர்க்கக்கூடிய ஒரு மேக்னெட்டா நீங்க இருப்பீங்கன்னு நான் நம்புறேன் ஏன்னா அந்த ஈர்ப்பு விதி எல்லாருக்குமே இருக்கணும் நல்லது நம்மள
9:59 தேடி வரக்கூடிய அளவுக்கு அந்த ஈர்ப்பு விதி பவர்ஃபுல்லா இருக்கணும் சரிங்களா மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்