மிதுன ராசிக்கு Feb 14 அசுர வளர்ச்சி ஆரம்பம்! எல்லா கஷ்டமும் முடியப்போகுது! Mithunam 2026

Play Tamil www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

மிதுன ராசி நேயர்களுக்கு, உங்கள் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் சந்தித்த கஷ்டங்கள் நீங்கி, இழந்த செல்வாக்கு, சொத்துக்கள், சந்தோஷம் ஆகியவற்றை மீண்டும் பெறுவீர்கள். 2026 பிப்ரவரி 14-க்குப் பிறகு உங்கள் வாழ்வில் அசுர வளர்ச்சி ஏற்படும். அறிவாற்றல், பேச்சாற்றல் மிக்க உங்களுக்கு இது பொற்காலமாக அமையும்.

  • 2026 பிப்ரவரி 14-க்குப் பிறகு முன்னேற்றம்
  • பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சி
  • சமூகத்தில் அந்தஸ்து உயரும்

மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள் மற்றும் கடந்த கால சவால்கள்

மிதுன ராசிக்காரர்கள் அறிவாற்றல் மற்றும் பேச்சாற்றலுக்கு பெயர் பெற்றவர்கள். புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட இவர்கள், ஒரே நேரத்தில் பல காரியங்களை துல்லியமாக செய்யும் திறன் படைத்தவர்கள். இருப்பினும், கடந்த 2025-ஆம் ஆண்டில் பல சவால்களை சந்தித்தனர். இரட்டை மனநிலை காரணமாக குழப்பம் அடைந்தனர். தங்கள் கஷ்டங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து, கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது போல் காட்டிக்கொண்டனர்.

2026 பிப்ரவரி 14-க்குப் பிறகு ஏற்படும் மாற்றங்கள்

2026 பிப்ரவரி 14-க்குப் பிறகு, சூரிய பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பூர்வீக சொத்து விவகாரங்கள் மற்றும் தந்தை வழியிலான உறவுகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாக மாறும். பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலைக்கு உயருவீர்கள்.

தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படும் நன்மைகள்

வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கித்துறை, தகவல் தொழில்நுட்பம், கலைத்துறை மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு இது பொற்காலமாக இருக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முதலீடுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை பிறக்கும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆரோக்கியம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் குறையும். எதிரிகளின் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும். சமூகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசு வழியில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.

அதிர்ஷ்டத்தை பலப்படுத்த பரிகாரங்கள்

புதன்கிழமை தோறும் விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஏழை மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தமான உபகரணங்களை தானமாக வழங்குங்கள். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள். பசுக்களுக்கு பச்சைப்புல் அல்லது அகத்தி கீரை வழங்குங்கள். புதன்கிழமை அன்று பச்சை நிற வஸ்திரங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 மிதுன ராசி நேயர்களுக்கு வணக்கம். உங்கள் வாழ்வின் இருண்ட பக்கங்கள் முழுமையாக மறைந்து ஒரு ஒளிமயமான புதிய பொற்காலம் இப்போது உங்கள் கண் முன்னே விரிந்திருக்கிறது. இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த தீராத சோதனைகள் உங்களை நிலைகுலையச் செய்த வேதனைகள் மற்றும் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த துயரங்கள் என அனைத்தும் இனி பனி போல விலக போகின்றன. காலம் இவ்வளவு நாட்களாக உங்களை ஒரு செதுக்கப்படாத கல்லாக பாவித்து பல வலிகளை கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த வலிகள் அனைத்தும் இப்போது உங்களை ஒரு வைரம் போல ஜொலிக்க வைக்க போகிறது. விதிப்பயனால் நீங்கள் இழந்த அத்தனை செல்வாக்கையும் கவரவத்தையும் கைநழுவி போன சொத்துக்களையும் மற்றும் தொலைத்த சந்தோஷத்தையும் மீண்டும் ஒருங்கே பெறப்போகும் அந்த அபூர்வமான தருணம் இப்பொழுது கைகூடி வந்திருக்கிறது. உங்கள்

0:45 ராசிக்குரிய கிரகங்களின் சுழற்ச்சியும் உங்கள் ஜாதகத்தில் நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகளும் உங்களுக்கு முழுமையாக சாதகமாக மாறியுள்ள இந்த வேளையில் குறிப்பாக 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் இல்லம் தேடி வரப்போகும் அந்த அசுர வளர்ச்சியும் மகிழ்ச்சியான குட் நியூஸ் என்ன என்பது பற்றிதான் இந்த வீடியோவிலே நாம் மிக் தெளிவாகவும் ஆழமாகவும் பார்க்க போகிறோம். இந்த பதிவை முழுமையாக பாருங்கள் ஏனென்றால் இது உங்கள் நம்பிக்கையை உரமாக்கி உங்கள் வாழ்க்கையையே புரட்டி போடப்போகும் ஒரு பொன்னான பதிவாக அமையலாம். மிதுன ராசி நேயர்களை பொறுத்தவரை நீங்கள் பொதுவாகவே அறிவாற்றலுக்கும் அபாரமான பேச்சாற்றலுக்கும் பேர்போனவர்கள் புதன் பகவானை உங்கள் ராசி அதிபதியாக கொண்ட நீங்கள் மிருக சீரிஷம் மூன்று நான்காம்

1:31 பாதங்கள் திருவாதிரை மற்றும் புனர்பூஷம் ஒன்று இரண்டு மூன்றாம் பாத நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நீங்கள் இயல்பிலேயே புத்திசாலிகள் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் பல காரியங்களை மிக துல்லியமாக செய்யும் பேராற்றல் கொண்டவர்கள் ஆனால் கடந்த 2025 ஐஆம் ஆண்டில் நீங்கள் சந்தித்த சவால்கள் மற்றும் போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல ஒரு இக்கட்டான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நீங்கள் இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு பெரிய மாற்றத்தை நோக்கி நகரப்போகிறது என்பதை இப்பொழுது விரிவாக காண்போம். மிதுன ராசிக்காரர்கள் எதையும் லாஜிக்குடன் சிந்திப்பவர்கள் என்பதால் உங்கள் திறமையை இந்த உலகம் இதுவரை அங்கீகரிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த ஏமாற்றங்கள் அனைத்தும் இனி முடிவுக்கு வரப்போகின்றன.

2:18 நீங்கள் மிகவும் புத்திசாலிகள் என்றாலும் உங்கள் இரட்டை மனநிலை உங்களை அவ்வப்போது பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். ஒரு முடிவை எடுப்பதில் உங்களுக்குள் இருக்கும் போராட்டங்கள் உங்களை சில நேரங்களில் சோர்வடைய செய்திருக்கலாம். தன்னுடைய கஷ்டத்தையும் கண்ணீரையும் கடுகளவு கூட மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வதில நீங்கள் மிகவும் வல்லவர்கள். இதனாலேயே உங்களை பார்ப்பவர்கள் அனைவரும் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன குறைச்சல் அவர்கள் எப்போதும் எவ்வளவு கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் உண்மையிலே உங்கள் மனதிற்குள் இருக்கும் போராட்டமும் உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் நீங்கள் படும்பாடும் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். உங்கள் கஷ்ட காலத்திலே உங்களை திரும்பி பார்க்க கூட ஆளில்லாமல் இருந்திருப்பீர்கள். நீங்கள்

3:03 தட்டுத்தடுமாறி மீண்டும் எழுந்து நிற்க முயற்சிக்கும் பொழுது உங்களை குறை சொல்வதற்கே ஒரு பெரிய கூட்டம் உங்களை சுத்தி தேடி வரும். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசினாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக உங்கள் புத்திசாலித்தனத்தால் வெல்பவர்கள் நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களோ அல்லது நண்பர்களோ ஒரு தேவைக்காக மட்டுமே உங்களிடம் வருவார்கள் அந்த தேவை முடிஞ்ச உடனே உங்களை தூக்கி போட்டுட்டு சென்றுடுவார்கள் மீண்டும் அவங்களுக்கு ஒரு உதவி தேவைப்படும் பொழுது அதே முகத்தோடு உங்களிடம் வருவார்கள் அவர்கள் உங்களுக்கு செய்த துரோகங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு மீண்டும் அவர்களுக்கே உதவி செய்து ஏமாறக்கூடிய ஒரு மென்மையான மனது உங்களுக்கு உண்டு வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று தினம் தினம் போராடுபவர்கள் நீங்கள் கடந்த காலகட்டங்களில் ஏதேனும் நல்லது நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்த போதெல்லாம்

3:50 உங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது குறிப்பாக உங்கள் உழைப்பையும் உங்கள் திட்டங்களையும் வேறு யாரோ திருடி செயல்படுத்தி பலன் பெற்றபோது உங்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும் என்பது எனக்கு தெரியும் அந்த வழிகள் அனைத்திற்கும் ஒரு மருந்தாக இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதி அமையப்போகிறது கடந்த காலத்திலே நீங்கள் உங்கள் சொத்துக்களை இழந்திருக்கலாம் சொந்த பந்தங்களை இழந்திருக்கலாம் அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளை கூட இழந்திருக்கலாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும்தான் தனியாக நிற்கிறேனே என்று வருந்திய காலங்கள் இனி திரும்பாது இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகு வாழ்க்கையில் வாழ வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு போயிருக்கலாம் உங்கள் மனதிற்குள் கவலையும் துன்பமும் பாரமாக ஏறி இருக்கும் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு

4:36 முயற்சியையும் தடுப்பதற்கும் உங்களை அவமான அவமானப்படுத்துவதற்கும் இங்கு நிறைய நபர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இது அனைத்தும் தெரிந்தும் கூட மற்றவர்கள் என்னவோ பண்ணட்டும் என்று உங்கள் அறிவாற்றலில் மட்டுமே குறியாக இருப்பவர்கள் நீங்கள் நான் யாருக்குமே கெடுதல் நினைக்கவில்லை பிறகு ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனைகள் என்று நீங்கள் கேட்டதற்கெல்லாம் விடை கிடைக்க போகிறது. இந்த 2026 ஆண்டு பிப்ரவரி 14 தேதி அன்று சூரிய பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான கும்ப ராசிக்கு பெயற்சியாகிறார். இது உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. இதுவரை தடைப்பட்டு வந்த பூர்வீக சொத்து விவகாரங்கள் மற்றும் தந்தை வழியுறவுகள் மூலம் கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் இனி உங்களை தேடி வரப்போகிறது. பிப்ரவரி 14

5:22 தேதிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாக்கிய பலன்களால் வெற்றியாக மாறும். சனியுடைய வக்கிர நிவர்த்தி மற்றும் குருபகவானின் அருட்பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பொருளாதார ரீதியாக ஒரு அசுர வளர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஏற்பட போகிறது. இதுவரை நீங்கள் மற்றவர்களிடம் உதவி கேட்ட நிலை மாறி இனி மற்றவர்களுக்கு தானம் செய்யும் நிலைக்கு நீங்கள் உயர போகிறீர்கள். இந்த மாற்றமானது உங்கள் சமூக அந்தஸ்தை ஒரு புதிய உயரத்திற்கு தள்ளும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசி இளைஞர்களுக்கு அவர்களின் அபாரமான பேச்சாற்றலுக்கு ஏற்ற நல்ல வேலை பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு நிச்சயமாக அமையும். குறிப்பாக வங்கித்துறை, தகவல் தொழில் நுட்பம், கலைத்துறை மற்றும் ஊடகத்ததுறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். ஏற்கனவே பணியில்

6:08 இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கைகூடி வரும். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் திறமையை இப்போதுதான் சரியாக உணர்ந்து உங்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்கள் ஒரு புதிய தொழில் தொடங்க திட்டமிட்டுருந்தால் அதற்கான முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் எவ்வித தடையும் இன்றி அமையும் வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி லாபத்தை இரட்டி பார்க்குவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். கைநழுவி போன பழைய ஒப்பந்தங்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மற்றும் உறவுகளுக்குள் இருந்த கசப்புகள் பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த புரிந்துணர்வு

6:54 குறைபாடுகள் மறைந்து மீண்டும் ஒற்றுமை பிறக்கும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். திருமண தடையால் மனமுடைந்தவர்களுக்கு தகுந்த வரன் அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கி உங்களுக்கு சேர வேண்டிய நியாயமான பங்கு கௌரவமாக வந்து சேரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் கை ஓங்கும் காலம் இது உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் இப்பொழுது உங்கள் வளர்ச்சியை பார்த்து வியந்து போவார்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த நரம்பு தளர்ச்சி தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு படிப்படியாக குறைய தொடங்கும்.

7:40 குறிப்பாக மார்ச் மாதத்தில் நிகழும் ராகு கேது பெயற்சிக்கு பிறகு உங்கள் உடலில் ஒரு புதிய தெளிவையும் உற்சாகத்தையும் உணர்வீர்கள். உங்களை அவமானப்படுத்த நினைத்த எதிரிகளின் சூழ்ச்சிகள் உங்கள் அறிவின் முன்னால் தவிடுபொடியாகும். அவர்கள் தானாகவே உங்கள் வழியிலிருந்து விலகிச் செல்வார்கள். சமூகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதை கூடும். அந்தஸ்தில் நீங்கள் எதிர்பார்த்த உயர்வுக்கு செல்ல போகிறீர்கள். அரசு வழியில் வரவேண்டிய சலுகைகள் மற்றும் பணப்பலன்கள் விரைந்து கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் மற்றும் வெளிநாடு செல்லும் கனவுகள் இப்பொழுது நனவாகும். இவ்வளவு நற்பலன்கள் உங்களை தேடி வரப்போகும் இந்த நேரத்திலே உங்கள் அதிருஷ்டத்தை இன்னும் பலப்படுத்திக் கொள்ள சில எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும். மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான் என்பதால் புதன்கிழமை தோறும்

8:26 விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது உங்கள் அறிவாற்றலை இன்னும் கூர்மையாக்கும். குறிப்பாக பிப்ரவரி 14 தேதிக்கு பிறகு வரும் முதல் புதன்கிழமை அன்று ஏழை மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தமான உபகரணங்களை தானமாக வழங்குங்கள். மேலும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உங்கள் மன உறுதிக்கு பலம் சேர்க்கும். பசுக்களுக்கு பச்சைப்புல் அல்லது அகத்தி கீரை வழங்குவது உங்கள் கர்ம வினைகளை குறைக்கும். உங்களால் முடிந்தால் புதன்கிழமை அன்று பச்சை நிற வஸ்திரங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். தன்னம்பிக்கையை மட்டும் எக்காரணம் கொண்டும் கைவிடாதீர்கள். இதுவரை நீங்கள் இழந்த அத்தனை வாய்ப்புகளையும் இந்த 2026 ஆண்டு உங்களுக்கு திருப்பி கொடுக்க போகிறது. பிப்ரவரி 14 தேதிக்கு

9:13 பிறகு உங்கள் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது. இது மிதுன ராசிக்காரர்களுக்கான ஒரு மாபெரும் வெற்றி காலம். உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை கடந்து நேர்மறையான பாதையிலே நீங்கள் பயணிக்க வேண்டிய நேரம் இது. இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு மிகப்பெரிய வெகுமதி காத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கனவுகள் ஒவ்வொன்றாக நனவாவதை நீங்கள் கண்முன்னே காண்பீர்கள். உங்கள் பொறுமைக்கும் உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருந்தால் லைக் செய்யுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்கள் ராசி குறித்த கூடுதல் சந்தேகங்களை கமெண்டில் கேட்கலாம். நம்முடைய இந்த ஆன்மீக பயணம் தொடர வேண்டும் என்றால் நமது சேனலை இன்னும் சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் உடனே செய்து

9:58 கொள்ளுங்கள். உங்கள் ஆதரவுதான் எங்களை இன்னும் பல தகவல்களை திரட்ட தூண்டுகிறது. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பிப்ரவரி 14 தேதி உங்கள் வாழ்வில் ஒரு புதிய பொற்காலத்தின் தொடக்க புள்ளியாக அமையும். எதற்கும் அஞ்சாதீர்கள் நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி தேவதை உங்கள் வாசலில் வந்து நிற்கிறாள் இனிவரும் காலம் உங்களுக்கு வசந்த காலமாகவே அமையும். அடுத்த ஒரு அற்புதமான பதிவில் உங்களைச் சந்திக்கிறேன்.

Share

YouTube Video Summaries