0:00 தனுசு ராசி நேயர்களுக்கு வணக்கம். மார்ச் 6, 2026 ஆம் தேதிக்கு பிறகு உங்கள் வாழ்க்கையிலே ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்க போகிறது என்று நான் சொல்லியிருந்தேன். இது நூற்றுக்கு 100 சதவீதம் உண்மை நவகிரகங்களில் கர்ம வினை பயனை அளிப்பவர் என்றும் நீதிமான் என்றும் அழைக்கப்படுபவர் சனி பகவான். உங்கள் ஜாதகத்தில் மிக உயரிய அதிகாரம் கொண்ட அதாவது சுப்ரீம் பவர் கொண்ட கிரகம் இதுதான். தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனி பகவான் மார்ச் ஆறாம் தேதிக்கு பிறகு ஒரு விசேஷமான நிலையை எட்டுகிறார். இந்த காலகட்டத்தில் அவர் 100 மடங்கு அதிக வலிமை பெற்று உங்களுக்கு அருள் பாலிக்க போகிறார். பொதுவாக சனி பகவான் என்றாலே பயப்படுபவர்கள் அதிகம். ஆனால் உண்மையில் அவர் ஒருவருக்கு கொடுக்க ஆரம்பித்தால் அதை
0:45 யாராலும் தடுக்க முடியாது. அவர் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திடும் கிரகமாக அமையும் போது மார்ச் ஆறாம் தேதிக்கு பிறகு கிடைக்கப்போகும் பலன்கள் ஒரு மிகப்பெரிய பரிசாக அமையும். மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் என்னென்ன பெரிய நன்மைகளை உங்களுக்கு வாரி வழங்க போகிறார் என்பதை நாம் இப்பொழுது விரிவாகவும் ஆழமாகவும் தெரிந்து கொள்வோம். தனுசு ராசி நேயர்களை பொறுத்தவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கும் மூன்றாம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். உங்கள் தனம் வாக்கு குடும்பம் மற்றும் உங்கள் தைரியம் முயற்சி ஆகியவற்றை தீர்மானிக்கும் மிக முக்கியமான கிரகம் அவர்தான். வாக்கிய பஞ்சாங்கப்படி மார்ச் 6, 2026 முதல் மீன ராசிக்குள் தனது பிரவேசத்தை தொடங்குகிறார். தனுசு ராசிக்கு இது நான்காம் இடமாகும். இதை அர்த்தாஷ்டம சனி
1:32 என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. பொதுவாக நான்காம் இடத்தில் சனி வரும்போது மனக்குழப்பங்கள் வரும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் தனுசு ராசிக்கு சனி பகவான் தன மற்றும் தைரிய ஸ்தானத்தின் அதிபதி என்பதால் நான்காம் இடத்தில் அவர் அமர்வது உங்களுக்கு சொத்து யோகத்தை தேடி தரும் ஒரு மகா ராஜ யோகமாக மாறப்போகிறது. உங்கள் தம்னைலில் நான் குறிப்பிட்டது போல இந்த மார்ச் ஆறு மாற்றத்திற்கு பிறகு ஒரு ரகசிய உயில் உங்களை தேடி வரப்போகிறது. அது உங்கள் பூர்வீக சொத்தாக இருக்கலாம். அல்லது நீங்கள் செய்த ஏதோ ஒரு பழைய உதவிக்கு பிரதிபலனாக யாரோ ஒருவர் எழுதி வைத்த உயிலாகவும் இருக்கலாம். அந்த சொத்து உங்கள் கைக்கு வந்த பிறகு உங்களின் பொருளாதார நிலை 2050 வரை தடையின்றி
2:18 உச்சத்தை அடைய போகிறது. பணம் உங்கள் கைகளில் புரளப்போகும் ஒரு மகா யோகத்திற்கு நீங்கள் இப்பொழுது தயாராக வேண்டும். சனி பகவான் இப்பொழுது அமரப்போகும் மீன ராசி அவருக்கு ஒரு நட்பு வீடாகும். குருவின் வீட்டில் அமரும் சனி பகவான் உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார். அவர் நான்காம் இடத்தில் அமர்ந்து கொண்டு அங்கிருந்து தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசியின் முக்கிய இடங்களை பார்க்க போகிறார். முதலில் இந்த மார்ச் ஆறு மாற்றத்தினால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய முதல் தகுதி என்னவென்றால் எதிர்பாராத தன லாபம் மற்றும் பிரம்மாண்டமான சொத்துச் சேர்க்கையாகும். நான்காம் இடம் என்பது வீடு வாகனம் தாய் மற்றும் சொத்துக்களை குறிக்கும். சனி பகவான் இங்கே அமரும் பொழுது நீண்ட காலமாக சட்டச்சிக்கலில் அல்லது குடும்ப வாரிசுரிமை விவாதத்தில் இருந்த ஒரு உயில்
3:04 அல்லது பெரிய சொத்து ஒப்பந்தம் இப்போது உங்களுக்கு முழுமையாக சாதகமாக முடியும். இதன் மூலம் கிடைக்கப்போகும் அந்த ரகசிய செல்வம் வரும் 2050 வரை உங்களை ஒரு பொருளாதார சாம்ராஜ்யத்தின் அதிபதியாக நிலைநிறுத்தும். பூமி, மனை, கார் என்று நீங்கள் எதை வாங்க விரும்பினாலும் உங்களின் அந்தஸ்தை உயர்த்தி தரும் பொறுப்பை சனி பகவான் ஏற்றுக் கொள்கிறார். இதில் எல்லளவும் சந்தேகம் வேண்டாம். இதுவரை இருந்த பணப்பற்றாக்குறை இனி இருக்காது. உங்களை மதிக்காதவர்கள் கூட உங்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். இதுவரை முடங்கி கிடந்த உங்கள் திறமைகள் இப்போது உலகிற்கு தெரிய வரும். உங்களுக்கு தேடி வரும் இந்த சொத்து யோகம் உங்களின் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அடுத்ததாக சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் மதிப்பு உயர போகிறது. மார்ச் ஆறாம் தேதி முதல்
3:51 பொதுமக்களிடமிருந்து அல்லது உங்கள் தொழில் துறையில் இருப்பவர்களிடமிருந்து திடீரென்று உங்களுக்கு புகழும் மதிப்பும் கிடைக்க ஆரம்பிக்கும். ஏனெனில் நான்காம் இடத்தில் வலிமை பெற்ற சனி பகவான் ஒருவருக்கு சமூகத்திலே மிகப்பெரிய செல்வாக்கை வழங்குவார். இதுவரை உங்களை பகைத்துக் கொண்டவர்கள் கூட இப்பொழுது நட்புக்கரம் நீட்டி உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். அதேபோல குடும்ப ரீதியாக பார்த்தால் உங்கள் தாயாரின் பெயரில் உள்ள சொத்துக்கள் அல்லது அவர்கள் குடும்பத்தின் மூலம் வரும் யோகங்கள் உங்களுக்கு பெரிய பலமாக இருக்கும். ஒருவேளை பூர்வீக சொத்து சம்பந்தமாக ஏதேனும் விவாதங்கள் இருந்து வந்தால் மார்ச் ஆறுக்கு பிறகு அந்த சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறி அந்த பெரிய சொத்து உங்கள் கைக்கு வந்து சேரும். உறவினர்களிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் யார் எதா
4:37 சொன்னாலும் நீங்கள் அமைதியாக இருந்து காரியத்தை சாதிப்பது உங்களுக்கு பெரிய நன்மைகளை தரும் உங்கள் நிர்வாக திறன் இப்போது ஒரு புதிய பரிமாணத்தை எட்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தனுசு ராசி நேயர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். சனி பகவான் நான்காம் இடத்தில் அமர்வதால் உங்கள் தேவையற்ற அழைச்சல்கள் குறையும். நீண்ட நாட்களாக மருத்துவ் செலவுகளால் அவதிப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் சீராகி அந்த செலவுகள் முழுமையாக குறையும். இருப்பினும் நுரையீரல் மற்றும் மார்பு சார்ந்த பகுதிகளில் அவ்வப்போது கவனம் தேவை. ஜீரண மண்டல பிரச்சனைகள் வராமல் இருக்க ப்ரோபயாடிக் உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். பழைய சோறு மோர், தயிர் போன்ற பாரம்பரிய உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும். உடல்
5:22 உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்யாத தனுசு ராசி நேயர்களுக்கு சிறு மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது. தனுசு ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் வந்தால் அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். எனவே தினமும் நடைப்பயிற்சி அல்லது தியானம் செய்வதை ஒரு வழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு தைராய்டு அல்லது இடுப்பு எலும்பு சார்ந்த உபாதைகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே கவனிப்பது நல்லது. இதற்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். முறையான தூக்கம் மற்றும் சரியான ஓய்வு உங்கள் மூளைக்கு கூடுதல் பலம் தரும். ஆரோக்கியமான உணவு முறைகள் உங்கள் வாழ்நாளை நீட்டிக்கும். பொருளாதார ரீதியாக பார்த்தால் இதுவரை இருந்த வருமான தடைகள் மார்ச் ஆறக்கு பிறகு படிப்படியாக முழுமையாக மாறும். நீங்கள் நீண்ட காலமாக
6:07 தீர்க்க முடியாமல் இருந்த கடன் உபத்திரவங்களில் இருந்து வெளியே வர ஒரு புதிய வழி அல்லது ரூட் பிறக்கும். அந்த ரூட்டை கரெக்டா பிடிச்சிட்டு கடன்ல இருந்து வெளியில வந்துரணும். உங்கள் தம்னைலில் சொன்னது போல 2050 வரை பணம் புரள போகும் அந்த அமைப்பு உங்களுக்கு ஒரு புதிய தொழில் அல்லது பெரிய முதலீடு மூலம் அமைய போகிறது. நீங்கள் ஒரு பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய பொருளை வாங்க நினைச்சால் அதற்கு இது மிகவும் ஏற்ற காலம். 10 வருடங்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இப்போது சட்டன் முடியும். ஒரு புது போன் வாங்கி வச்சிருப்பீர்கள். அதை மாற்றக்கூட நேரம் இருக்காது என்று ஓடிக்கொண்டிருந்த காலம் மாறி இனி நிதானமாக செல்வத்தை சேர்க்க போகிறீர்கள். குடும்பத்தாரோடு சந்தோஷமாக இருக்கக்கூடிய ஒரு நிம்மதியான சூழலை சனி பகவான் ஏற்படுத்தி கொடுப்பார். சேமிப்பு விஷயத்தில் நீங்கள் காட்டும் ஆர்வம்
6:54 உங்கள் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்யும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். பங்குச்சந்தை அல்லது ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். சனி பகவானின் பார்வைகளுக்கு எப்பொழுதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவர்தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து மூன்று ஏழு மற்றும் பத்தாம் இடங்களை பார்க்கிறார். மார்ச்ாரிக்கு பிறகு அவரது பார்வையின் பலன்கள் தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம். அவரது மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்துரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. இது உங்கள் எதிரிகள் அனைவரையும் அடியோடு காணாமல் போகச் செய்யும். நீதிமன்ற வழக்குகள் அல்லது சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்கி
7:39 தவிப்பவர்களுக்கு நிம்மதியான தீர்ப்புகள் கிடைக்கும். கடன் தொல்லைகள் முழுமையாக நீங்கும். நீண்ட நாட்களாக படுத்தி எடுத்த ஆரோக்கிய குறைபாடுகள் மறைந்து புதுத்தெம்பு பிறக்கும். வேலையில் இருந்த மறைமுக போட்டிகள் நீங்கி உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். இது உங்கள் வெற்றி பயணத்திற்கு பெரும் துணையாக இருக்கும். அடுத்ததாக சனி பகவானின் ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான கர்மஸ்தானத்தின் மீது விழுகிறது. இது உங்களை ஒரு மிகவும் பொறுப்பான மனிதராக மாற்றும். சமுதாயத்தில் உங்கள் சொல்வாக்கும் செல்வாக்கும் பல மடங்கு உயரும். இதுவரை உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். இது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து 2050 வரையிலான உங்களின் நீண்ட கால திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த உதவும். உங்கள்
8:24 முகத்தில் ஒரு புதிய பொலிவும் வசீகரமும் உண்டாகும். மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் தொழில் முனைவு மற்றும் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு முதலாம் வீடான ஜென்ம ராசியின் மீது விழுகிறது. இதனால் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய நிலம் அல்லது வீடு வாங்க திட்டமிடுபவர்களுக்கு சனி பகவான் அருள் பாலிப்பார். தாயாரின் ஆரோக்கியத்திலே நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பூர்வீக சொத்து விவகாரங்கள் இப்பொழுது உங்களுக்கு முழுமையாக சாதகமாக முடியும். இது உங்களின் சொத்து மதிப்பை பல மடங்கு உயர்த்தும் ஒரு பொற்காலமாகும். கல்வியில் இருக்கும் மாணவர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம்.
9:11 அவர்களின் கற்கும் திறன் அதிகரித்து தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வழிவகுக்கும். வேலையை பொறுத்தவரை மார்ச் ஆறாம் தேதிக்கு பிறகு உங்கள் தொழில் துறையிலே நீங்கள் ஒரு மிகப்பெரிய எழுச்சியை காண்பீர்கள். கர்மக்காரகனின் பார்வை பத்தாம் இடத்தை பார்ப்பதால் உங்கள் வேலையில் ஒரு நல்ல ஸ்திரத்தன்மை உண்டாகும். இதுவரை வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கி புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். நீங்கள் ஒருவேளை வேலையை மாற்ற விரும்பினால் இப்போது முயற்சி செய்யுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல சம்பளத்துடன் உயரிய வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். சனி பகவானின் அருளால் உங்கள் வியாபாரத்தில் ஒரு பெரிய முதலீடு தேடி வரும். தேங்கி கிடந்த சரக்குகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். எங்கோ சிக்கியிருந்த உங்கள் பணம் வட்டியுடன் வசூலாகும். புதிய தொழில் நுட்பங்களை
9:57 கற்றுக்கொண்டு உங்கள் தொழிலில் பயன்படுத்துவது உங்களுக்கு பெரிய வளர்ச்சியை தரும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். சனி பகவானின் இந்த மாற்றத்தால் உங்கள் நீண்ட கால கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகும். 2050 வரை நீங்கள் பொருளாதார பேரரசாக திகழ சனி பகவான் வழி வகுப்பார். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். குறிப்பாக உயர்கல்விக்காக காத்திருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரியிலே இடம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்க விரும்புபவர்கள் அல்லது அங்கு கல்வி பயில நினைப்பவர்களுக்கு இந்த மார்ச் ஆறிற்கு பிறகு ஒரு நல்ல செய்தி நிச்சயம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு லாபகரமாக அமையும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். இது உங்கள் கர்ம வினைகளை குறைக்கும் கலைஞர்களுக்கு
10:42 பாராட்டும் பணமும் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்கி தவிப்பவர்களுக்கு நிம்மதியான தீர்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் இப்பொழுது இரட்டிப்பு பலனை தரும். பரிகாரங்களை பொறுத்தவரை மாதத்திற்கு ஒரு நாள் முருகன் கோயிலுக்கு சென்று வருவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் எழ்கலந்த சாதத்தை காகத்திற்கு வைப்பதும் ஏழை எளியவர்களுக்கு அல்லது துப்புறவு தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானம் செய்வதும் சனியின் தாக்கத்தை குறைத்து நன்மைகளை தரும். பசுவிற்கு அகத்தி கீரை அல்லது வாழைப்பழம் கொடுப்பது உங்களுக்கு தடையில்லாத பணவரவை தரும். தியானம் மற்றும் யோகா செய்வது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது உங்கள் குடும்பத்தை காக்கும் கவசமாக அமையும். ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமன்
11:29 வழிபாடு செய்வது உங்களுக்கு மிகுந்த மன தைரியத்தை கொடுக்கும். காலபைரவர் வழிபாடு செய்வது உங்கள் தடைகளை நீக்கும். ஒரே ராசியில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் பொழுது அனைவருக்கும் இந்த சமமான பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் வரலாம். உங்கள் ஜாதகத்தை எடுத்து பாருங்கள் உங்கள் லக்னத்தில் இருந்து கணக்கிடும் பொழுது சனி பகவான் வலிமையாக அமர்ந்திருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் அவர் நீச நிலையில் இல்லாமல் இருந்தால் நான் சொன்ன ஒவ்வொரு பலனும் உங்களுக்கு உண்மையாக நடக்கும். சனி பகவான் உங்களுக்கு சகல செல்வங்களையும் மன அமைதியையும் நீண்ட ஆயுளையும் வழங்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். மார்ச்ஆறு முதல் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மற்றுமொரு புதிய தகவலுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.