0:00 பண்பும் பழமையும் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்ங்க. இந்த வீடியோல என்னை பேச வைத்த எம்பெருமான் முருக பெருமானுக்கு முதல் வணக்கத்தை தெரிவிச்சுக்கிட்டு வீடியோக்குள்ள போலாங்களா நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிட்டே உங்கனால முடிஞ்சதுனா கமெண்ட் பாக்ஸ்ல ஒரு முறை கமெண்ட் பண்ணுங்க. ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் என்னை காக்கும் கந்தா கடம்பா கதிர்வேலா நீதான் என்னை நம்பி இந்த வீடியோ பதிவை பார்க்க வந்தவங்களை கூட நின்னு காப்பாத்தணும். அவங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் விலகி சந்தோஷமாய் இருக்க நீதான் ஐயா பொறுப்பு. ஜோதிடம் என்னும் மகா கலை மூலம் நாம் இன்று இணைந்துள்ளோம். இந்த கலையில துலாம் ராசி நேயர்களுக்கு என்னெல்லாம் நடக்க போகுது? அவங்க வாழ்க்கை நல்லபடியா மாறுமா மாறாதா? அவங்க பிழைக்க ஒரு வழியாவது இனி இருக்கா?
0:46 என அனைத்து விஷயங்களையும் விலாவரியா பேச போறோங்க. அதற்கு முன்னாடி சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்படியே பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து வைங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உடனே உங்ககிட்ட வரும். இப்ப பாத்தீங்கன்னா 2025 கார்த்திகை மாத பலாபலன்கள் எப்படி இருக்கப்போகுது என்ன செய்யலாம் அப்படிங்கறத பத்தி ஒவ்வொரு ராசிக்கும் விரிவாக தெளிவாக நம்ம பார்க்க இருக்கிறோம். அந்த வகையில இப்ப கார்த்திகை மாதம் அப்படினாலே மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த மாதம் கார்த்திகை மாதம். ஏன்னா சூரிய பகவான் பார்த்தீங்கன்னா காலசக்கரத்தில எட்டாம் இடத்தில இருந்து அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான மாதமாக இந்த மாதம் அப்படிங்கறது அமைஞ்சிருக்குது. அதுலையும் மிக மிக சிறப்பு அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா திருவண்ணாமலை தீபம். கார்த்திகை மாசம் நாளை எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடியது
1:32 தீபம்தான். அப்போ திருவண்ணாமலை தீபம் அப்படிங்கறது அது ஒரு பக்கம் இருந்தாலும் பரணி தீபம் அப்படிங்கறது நம்ம வீட்ல ஏத்துறது உண்டு. இந்த பரணி தீபம் அப்படின்னு பார்த்தோம்னாக்க நம்மளோட முன்னோர்கள் பித்துருக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அதேபோல குடும்பத்தின் மகிழ்ச்சி, சுபிக்ஷம், செல்வாக்கு, வசதி, லட்சுமி கடாக்சம் போன்ற அனைத்து விஷயங்களுக்குமே பார்த்தீங்கன்னா அந்த தீபம் ஏத்துறது ஏத்தி வழிபாடு செய்யறது அப்படிங்கறது வந்து மிக முக்கியமான ஒரு விஷயமா இருக்குதுங்க. அப்போ இந்த கார்த்திகை மாதத்துல இந்த கார்த்திகை தீபம் அப்படிங்கறது பாத்தீங்கன்னா கொண்டாடப்பட வேண்டிய மிகப்பெரிய முக்கியமான நிகழ்வா இது இருக்குதுங்க அதுலயுமே குறிப்பா திருவண்ணாமலை தீபத்தை பார்க்கிறது அப்படிங்கறது பாத்தீங்கன்னா மிகப்பெரிய புண்ணிய பாக்கியம் அப்படிங்கறது கிடைக்கும் அப்படிங்கறதும் அதேபோல முன்னோர்களுடைய சாப நிவர்த்தி சரியாகும் அப்படிங்கறதும் திருமணம் சார்ந்த விஷயங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி சார்ந்த விஷயங்கள் குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்
2:18 எல்லாமே பாத்தீங்கன்னாக்க வேண்டுதலோடு இந்த திருவண்ணாமலை தீபம் கிரிவளம் சென்று பார்க்கையில அது அற்புதமாக உங்களுக்கு அங்க இருக்கக்கூடிய சித்தர்கள் சார்ந்த விஷய விஷயங்கள் எல்லாருமே அருள்பாலித்து உங்களுக்கு அதற்கான விஷயங்கள் நீங்க என்ன நோக்கம் என்ன எண்ணத்திற்காக செஞ்சீங்களோ அந்த விஷயம் நடைபெறுவதற்கான அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான விஷயம் அப்படிங்கறது வந்து இந்த திருவண்ணாமலை தீபம் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய மிகப்பெரிய சிறப்பாக இருக்குதுங்க அன்பு சொந்தங்களான துலாம்ராசி அன்பர்களே நமக்கு யாரும் நல்லது பண்ணாட்டியும் பரவாயில்ல நம்ம யாருக்கும் கெடுதல் பண்ணிடக்கூடாது முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கணும் அதுக்கு நான் எவ்வளவு வேணா உழைக்கிறேன் எவ்வளவு வேணா விட்டு கொடுக்கிறேன் எது மேலயும் ஆசை இல்ல எதுவும் எனக்கு தேவையில்லை இதுதான் துலாம் ராசி வந்து பிக்ஸ் பண்ணி வச்சிருக்கீங்க ஆனா உங்களுக்காக நீங்க யோசிக்க
3:03 ஆரம்பிச்சீங்கனாக்க ஒருத்தருக்கும் ஒரு விஷயமும் மிஞ்சாது குடும்பம் அப்படின்னாவே அதுல முழு முழு பொறுப்பையும் துலாம் வந்து தூக்கி பிடிச்சிருக்கும். குடும்பத்துல துலாம் ராசியை சேர்ந்தவங்க சின்ன பிள்ளையகாவே இருந்தாலும் சரிங்க. அந்த குடும்பத்துடைய பொறுப்புக்கு இவங்கதான் பாதுகாப்பு. இவங்க தலையில யாரும் தூக்கி வைக்கல. இவங்க எல்லாம் முன்வந்து நம்ம குடும்பத்துடைய நல்லது கெட்டதுக்கு நம்மதான் பொறுப்பு. நம்மதான் எல்லாமே பண்ண முடியும். நம்ம குடும்பத்துடைய பாதுகாப்பு நம்ம கையிலதான் இருக்குங்கிறத உணர்ந்து செயல்படுவாங்க. ஆனா இவங்க எவ்வளவுதான் வந்து கஷ்டப்பட்டு எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தாலும் நீ என்ன பண்ணிட்ட? ஏன் நீ இல்லன்னா குடும்பம் நடக்காதா? இப்படி எல்லாம் நிறைய இடங்கள்ல பேச்சுகளுக்கு ஆளாகி இருப்பீங்க. உண்மை நினைச்சா கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க. அவங்களுக்கு ஒரு விஷயத்தை செய்றதுக்கு உயிரை கொடுத்து வேலை பார்த்திருப்பீங்க. அதை துச்சமா நினைச்சு தூக்கி எறிஞ்சு பேசி இருப்பாங்க. அந்த செகண்ட் துலாம் ராசி அப்படியே கண் கலங்கி
3:50 உட்கார்ந்திருப்பீங்க. பல நேரங்கள்ல பல இடங்கள்ல பட்ட அவமானத்தை நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டுட்டு இருந்திருப்பீங்க. ஏன் ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும் துலா ராசிக்கு எல்லாம் வந்து பாரபட்சமே கிடையாது. இலகன மனசுங்கிறதுனாலதான் சட்டுன்னு அழுதிருப்பீங்க. கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டவங்க தெரியாதவங்களுக்கு கூட ஒரு வாய் சாப்பாடு வாங்கி கொடுக்கணும்ன்னு யோசிக்க கூடியவங்க. இப்ப ரோட்ல போயிட்டு இருந்தா கூட சரி, அங்க யாராவது வந்துட்டு உதவி கேட்டு நிக்கிறாங்க. வந்து ரொம்ப முடியாம இருக்காங்க அப்படினாக்க திரும்பவும் போயிட்டா கூட திரும்பவும் வந்து அவங்களுக்கு உதவி செஞ்சுட்டு போகக்கூடியவங்க அது மட்டும் இல்லாம அந்த நாள் முடுக்கவே கடவுள் கிட்டயும் வந்துட்டு புலம்புவீங்க மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே இருப்பீங்க ஏன் அவங்களுக்கெல்லாம் இவ்வளவு கஷ்டம் முடிஞ்சா திரும்பவும் கூட போய் பார்க்கலாம் அப்படிங்கற மாதிரி எல்லாம் யோசிச்சிருப்பீங்க இதுதான் துலாம் நியாயமா இருப்பீங்க நேர்மையா இருப்பீங்க
4:36 தர்மத்துக்கு கட்டுப்பட்டு வாழ்வீங்க இதனாலே நிறைய கஷ்டப்பட்டுருப்பீங்க உங்களை பொறுத்தவரைக்கும் இந்த வீடியோ பதிவுடைய தலைப்பை பார்த்திருப்பீங்க கதவை மட்டும் தட்டும் வேஷ யோகம். கார்த்திகை மாதத்தில துலாம் ராசிக்கான பலன்கள் என்ன? யோகம் அப்படினாவே நம்ம வாழ்க்கைக்கு அமோகமான பலன்கள்னு முடிவு பண்ணிக்கோங்க. இந்த கார்த்திகை மாதத்தை பொறுத்தவரைக்கும் ஒரு யோகம் இல்லைங்க. மூன்று யோகம் இருக்கு. மேலும் இந்த மாதத்திலேயே சில கிரகங்களுடைய சஞ்சரிப்பு சில கிரகங்களுடைய மாற்றம் இதை பொறுத்து உங்களுக்கு நல்ல பலன்கள் இருக்கு. அது என்னென்னன்னு தெளிவா பார்க்கலாங்களா அதுக்கு முன்னாடி கார்த்திகை மாதம் அப்படினாவே கார்த்திகை வந்து முருகனுக்குரிய மாதம்ங்க. இந்த மாதம் வந்து கட்டாயம் நீங்க முருகப்பெருமானை வழிபாடு செய்யணும். அவரை நீங்க எப்படி வழிபாடு செய்யணும் அதற்கான பரிகாரங்கள் பலன்கள் என்ன அப்படிங்கறதையும் பார்க்கலாங்க. கார்த்திகை மாதத்தில இந்த 30 நாட்களுமே முருகப்பெருமானை நினைக்கலாம். அப்படி
5:21 முடியாத பட்சத்துல செவ்வாய்க்கிழமைகளையாவது குளிச்சு முடிச்சிட்டு அதிகாலையில சுத்தபத்தமா வீட்டில இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு எல்லாம் பூஜைகள் செய்து தீபம் ஏற்றி முருகப்பெருமானுடைய படத்துக்கு முன்னாடி உட்காந்துட்டு ஒரு தட்டுல விபூதியால நான் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை வந்து எழுதிக்கோங்க. ஓம் நமோ குமாராய நம இதை எப்படிமா எழுதுறது அப்படின்னாக்க அந்த திருநீர்ல கொஞ்சம் தண்ணி சேர்த்து அத கரைச்சு அதுக்கப்புறம் எழுதுங்க ஓகேங்களா ஒரு தட்டுல எழுதிட்டு அதுக்கு முன்னாடி உட்கார்ந்து அமைதியா உட்காந்துக்கோங்க முருகப்பெருமான் கிட்ட வந்த உடனே வந்துட்டு சாமி பார்த்த உடனே எனக்கு அது வேணும் இது வேணும் ஏன் எனக்கு அந்த கஷ்டம் கொடுக்கற இந்த மாதிரி எந்த ஒரு வேலையுமே நீங்க பார்க்க கூடாதுங்க நம்முடைய கஷ்டத்தை வந்து நம்ம சொல்லாமலே புரிஞ்சுப்பார் முருகப்பெருமான் புரியுதுங்களா சோ அமைதியா அந்த படத்துக்கு முன்னாடி உட்காந்துக்கோங்க மனசு ஒரு நிலைப்படுத்தி அந்த முருகனை மட்டும் மனசார நினைச்சுக்கிட்டு அந்த மந்திரச்சொல் மேல வலது கை ஆழ்காட்டி வரல வச்சுக்கோங்க இந்த
6:08 குழந்தைக புத்தகத்த படிக்கிறப்போ வரி வரியா அதுக்கு மேல கை வச்சு கை வச்சு படிப்பாங்கன்னு சொல்லுவாங்க இல்லையா அதே மாதிரி 108 முறை ஓம் நமோ குமாராய நமன்னு சொல்லிட்டு இந்த மந்திரத்தை வந்து நீங்க படிக்கிறப்போ அந்த கைவிரல வந்துட்டு போயிட்டு போயிட்டு வரணும். இப்படி நீங்க விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செஞ்சீங்க அப்படின்னா துன்பம் இல்லாத துயரம் இல்லாத ஆனந்தத்தை அள்ளி தருவான் முருகப்பெருமான். சோ பரிகாரமும் முன்னாடி பார்த்தாச்சுங்க. இந்த மாதத்துடைய கிரகங்களுடைய சஞ்சாரத்தை முதல்ல பார்க்கலாம். இந்த மாதத்தை பொறுத்தவரைக்கும் நவ கிரகங்களுடைய தலைவன்னு சொல்லக்கூடிய சூரிய பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறி நவம்பர் 17ஆம் தேதியில வந்து கார்த்திகை மாதம் தொடங்குச்சுங்க. அடுத்த மாதம் டிசம்பர் 16 ஆம் தேதி வரைக்கும் சூரிய பகவானுடைய சஞ்சாரம் இப்படிதான் இருக்க போகுது. விருச்சக ராசிக்கு சூரிய பகவான் போனாரு ஆல்ரெடி அங்க வந்து புதன் பகவான் இருக்காருங்க. இந்த ரெண்டு கிரகங்களுடைய சேர்க்கைதான் புதாதிய
6:53 ராஜயோகம் இல்லைன்னா ஆதித்திய ராஜ யோகம்னு நம்ம சொல்லுவோம். இது ஒன்னு இரண்டாவது கடக ராசியில சஞ்சரிக்கக்கூடிய குருவினால சம சப்தம யோகம் உருவாகி இருக்கு. இது ரெண்டாவது. அடுத்து மூணாவது பார்த்தோம்னா சூரியனுக்கு இரண்டாம் வீட்ுல சுக்கிரன் சஞ்சரிக்கிறதுனால வேசி யோகம் உருவாகி இருக்கு. இதனால துலாம் ராசிக்கு செல்வ செலிப்பு மேலோங்கும். மனசுக்கு நிறைவு கிடைக்கும். அதிஷ்டம் பெறப்போறீங்க. அதிர்ஷ்டம்னா சாதாரண அதிர்ஷ்டம் இல்லைங்க. அதிர்ஷ்டமோ அதிஷ்டம் துலாம் ராசிக்கு உண்டு. அதாவது ஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருடம் நவம்பர் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை நாள்ல தமிழ் மாதம் தொடங்குச்சு இல்லையா இந்த மாத துவக்கத்தில கிரகங்களுடைய சஞ்சாரத்தை வச்சு ஆராய்ந்து பார்க்கிறப்போ உங்களுடைய ராசிநாதன்ு சொல்லக்கூடிய சுக்கிரன் உங்களுடைய ராசியிலேயே ஆட்சி பெற்று அற்புதமா அமர்ந்திருக்காருங்க இரண்டாவது விஷயம் தனக்காரகன் குடும்பக்காரகன் அப்படின்னு சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் தைரியத்தை
7:39 கொடுக்க கூடியவன் வருமானத்தை தரக்கூடியவன் அரசு சார்ந்த விஷயங்களில் இருந்து ஈடுபடுத்த கூடியவர் என்ன பண்றார் அப்படின்னா ரெண்டுல அமர்ந்திருக்கிறார் அப்ப சூரியன் செவ்வாய் புதன் அப்படிங்கற கிரகங்கள் பாக்கியாதிபதியும் சேர்ந்து அமர்ந்திருக்கக்கூடிய அமைப்பு ராசிக்கு இரண்டாம் இடத்தில அப்புறம் ராசிக்கு ஆறுல எப்போதும் போலவே சனி பகவான் ஐந்துல ராகு பகவான் அடுத்தும் போல 11 ஆம் இடத்தில கேது பகவான் இவ்வளவு நாளாக ஒன்பதாம் இடத்தில இருந்து வந்த குருபகவான் பத்தாம் இடத்துக்கு மாற்றம் அடைறாருங்க உச்சபலம் பெற்றிருக்கிறார் எப்படி பெறறார் உச்சபலம் பெறறாருங்க இந்த உச்சபலம் உங்களுக்கு என்ன விதமான மாற்றத்தை உங்களுக்கு தரும் முன்னேற்றத்தை தரும் அப்படிங்கறத பத்தி இப்ப பார்க்கலாங்க கிரகங்களுடைய சஞ்சரிப்பை தொடர்ந்து கார்த்திகை நட்சத்திரம் அப்படிங்கறது சிறப்புங்க ஒவ்வொரு மாதத்திலயுமே கார்த்திகை நட்சத்திரம் அப்படிங்கறது கடவுள் வழிபாடு வகந்தது நான் இதுலயே கார்த்திகை மாதத்தில கார்த்திகை நட்சத்திரம் வருதுங்கறது இன்னும் சிறப்பான விஷயம். அப்படி இந்த கார்த்திகை திருநாள்ல நீங்க
8:24 முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அதனுடன் சேர்த்து அவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய முத்தான வாழ்க்கையை அள்ளித் தருவான் அந்த முத்துக்குமரன். இதை வந்து மனசுல வச்சுக்கோங்க. முருகனை மட்டும் வழிபாடு செய்யாமல் விட்றாதீங்க. வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு நல்ல காலம் பிறக்கும்னு எதிர்பார்த்துறீங்க இல்லைங்களா அந்த நல்ல காலத்தை இந்த கார்த்திகை மாதத்தில நீங்க எதிர்பார்க்கலாம். சரிமா அந்த புதாதிய ராஜ யோகம் ஓகே இந்த சப்தம யோகம் ஓகே அது கூடவே இந்த வேஷ் யோகம்னா என்ன அப்படின்னு இப்ப வந்து நிறைய பேருக்கு தெரியாது. இந்த மாதத்துல சூரியனுடைய வந்துட்டு அவருடைய வீட்டில இருந்து இரண்டாம் வீட்டில சுக்கிரன் சஞ்சரிக்கிறதுதான் இப்போது அந்த யோகம்னு நான் சொல்றேங்க ஓகேங்களா இந்த யோகம் அப்படிங்கறது யாரால உருவாகுதுனாக்க நம்மளுடைய ஆன்மாவை குறிக்கக்கூடிய சூரியன் உருவாக்கப்பட்டது. இந்த யோகம் எப்படி வந்துட்டு பழிக்கும்னு பார்த்தோம்ன்னா, ஒருத்தவங்களுடைய ஜனன கால ஜாதக கட்டத்தை வச்சு பார்க்கிறப்ப சூரியன் இருக்கக்கூடிய
9:10 ராசிக்கு அடுத்த ராசியான இரண்டாம் வீட்ல சந்திரன், ராகு, கேது இந்த மூன்று கிரகங்களை தவிர்த்து மத்த கிரகங்கள் ஒன்னோ அல்லது மத்த கிரகங்களுடைய கூட்டணையில் இருந்தாலும் சரி, அந்த ஜாதகக்காரர்களுக்கு இந்த யோகம் அப்படிங்கறது பழிக்கும். இந்த யோகத்துடைய பலன் என்னன்னு பார்த்தோம்னா எந்த ஒரு விஷயத்தையுமே மிக சரியாக திட்டமிட்டு அதற்குண்டான பணிகளை செய்து வெற்றி பெறக்கூடியதுதான் இந்த ஒரு யோகத்துக்குடைய பலன்ங்க. துலாம் வந்துட்டு துள்ளி குதிப்பீங்க. மூன்றாம் யோகம் இருக்கு. நிறைய கிரகங்கள் வந்து உங்களுக்கு சாதகமா இருக்கு. சோ ரொம்ப அற்புதமான காலகட்டம். வரக்கூடிய வாய்ப்பை கரெக்டா பயன்படுத்துங்க. ஒரு விஷயம் மட்டும் துலாம் ராசிக்கு நான் சொல்றேன். யார் மீதும் அதீத அன்பு வைக்க வேண்டாம். அன்பு அப்படிங்கறது துலாம் ராசிக்கு இன்னைக்கும் என்னைக்கும் ஆபத்துதான். புரியுதுங்களா இதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க. சோ இப்ப வரைக்கும் பார்த்தது கார்த்திகை மாதத்துடைய சிறப்பு. கிரகங்களுடைய சஞ்சாரம் இந்த யோகத்துடைய பலன். இப்போ கார்த்திகை மாதத்தில துலாம் ராசிக்கான பொது பலன்களை பார்க்கலாம்.
9:56 துலாம் ராசியை பொறுத்தவரைக்கும் இந்த மாதம் அப்படிங்கறது சாதகமான மாதமாதான் இருக்கு. இருந்தாலும் இப்ப கொஞ்ச காலமா துலாப் வந்துட்டு சட்டு சட்டுன்னு கோபப்படுறீங்க முன்கோபம் கூடாது பொறுமை தேவை எந்த ஒரு செயலை செய்றதுக்கு முன்னாடியும் நிதானமா செயல்படுங்க உங்க நிதானத்தை இழந்துட்டீங்க அப்படின்னா இந்த மாதம் அப்படிங்கறது எவ்வளவு சாதகமான காலகட்டமா இருந்தாலும் நிம்மதி இல்லாம போறதுக்கு வாய்ப்பு இருக்கு. இந்த ரொம்ப பணக்காரங்க எல்லாம் வந்து பாத்தீங்கன்னா கோடி கோடியா பணம் வச்சிருந்தாலும் நிம்மதி இல்லாம போவாங்க இல்லையா அந்த மாதிரி ஒரு நிலைக்கு ஆளாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஏன்னா எடுத்தோம் கவுத்தோம் அப்படிங்கறது துலாம் ராசிக்கு சமீப காலமா பண்ணிட்டு இருக்கீங்க. எந்த இடத்திலயுமே என்ன வேணாலும் நடக்கட்டும் பொறுமையா இருங்க அதை மட்டும் நினைவுல இருக்கட்டும். எல்லா விஷயத்திலயுமே அனுபவசாலிகளுடைய பேச்சை கேட்கறது நடக்கறது ரொம்ப சிறப்பு. வேலைன்னு பார்த்தோம்னா வேலை அதிகமா இருக்கும் பிரஷர் இருக்கும் டார்கெட்டை முடிக்க முடியலையே அப்படிங்கிற சூழல் இருக்கும். இதெல்லாம் வந்து உங்களுக்கு ஒரு மாதிரி அழுத்தத்தை கொடுக்கும்.
10:42 இதனாலதான் வந்து நீங்க நிதானமா செயல்படணும்னு சொல்றீங்க. ஆனா நீங்க நிதானம் இல்லாமதான் செயல்படுவீங்க. இது எல்லாமே இப்ப வந்து தெரிஞ்சிட்டீங்க இல்லையா இந்த வீடியோ பதிவு அப்படிங்கறதே உங்களுக்கான ஹின்ட்தான். இந்த பதிவு பா்கறதுக்கு கடவுளுடைய அனுக்கிரகத்தினாலதான் இந்த மாதிரி எல்லாம் இருக்க போகுது. தம்பி உஷாரா இருந்துக்கோங்க. இந்த மாதிரி எல்லாம் இருக்க போகுதுமா? பாத்துரு அப்படிங்கற மாதிரி. சோ நிதானமா இருங்க. என்ன வேணாலும் நடக்கட்டும். பிரஷர் எடுத்துக்காதீங்க. அட முடிஞ்ச அளவுக்கு பண்ணுங்க. முடியாதத அப்புறம் பாத்துக்கலாம். நிறுத்தி நிதானிச்சு யோசிச்சு செய்யறப்போ அந்த வேலை அப்படிங்கறது முடியாம போகாதுங்க. கடவுளுடைய அனுக்கிரகத்தினால நீங்க நினைச்ச காரியங்கள் கைகூடும். ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. அதே மாதிரி வேலை போயிடுமோ நம்ம தொழில் வந்துட்டு நஷ்டம் ஆயிடுமோ இப்படி எந்த ஒரு யோசனையும் நெகட்டிவ்வான தாட்ஸ் எல்லாம் துலாம் ராசி தூர தூக்கி போற்றணும். வியாபாரத்தில இருந்த சின்ன சின்ன சிக்கல்கள் கூட சரியாயிருங்க. நஷ்டம் வரதுக்கு வாய்ப்பே இல்லை வாழ்க்கையில எல்லா நேரமும் ஒரே மாதிரி
11:28 இருக்காதுங்கிறத மட்டும் துலாம் ராசி உணர்ந்துக்கோங்க ஏன்னா எல்லாம் நம்ம கையில தான் இருக்கு பார்த்துக்கலாம் அப்படிங்கற ஒரு விஷயத்தை மண்டைக்குள்ள தூக்கிட்டு சுத்துறீங்க எதுவுமே நம்ம கையில நிரந்தரமா இருக்காதுங்கறத உணர்ந்துக்கோங்க ஒரு ப ரூபா நம்ம கையில வருது அப்படின்னாக்கே அதுல வந்து ஒரு அஞ ரூபா வந்து சேமிக்க பழகுங்க வர்து எல்லாத்தையுமே ஒத்த பைசா இல்லாம சுரண்டி செலவு பண்ணிட்டு இருக்கீங்க அதுவும் வீண் செலவு விரைய செலவாதான் பண்ணிட்டு இருக்கீங்க உபயோகமான செலவு கிடையாது துலாம் ராசிக்காரங்க இந்த விஷயம் எல்லாம் நீங்க கட்டாயம் நீங்க பண்ணிட்டு இருக்கீங்க இத இதெல்லாம் மாத்திக்கோங்க. அதே மாதிரி எல்லாம் ஓகே. நான் வந்து கொஞ்சம் பொறுமை இல்லாம இருக்கேன். கடவுள் மேல நம்பிக்கை இருக்குல்ல குல தெய்வத்தை வழிபாடு செய்யுங்க. குல தெய்வத்துடைய பாதத்தை இருக்குமா பிடிச்சுக்கோங்க. அந்த சாமியுடைய அனுக்கிரகம் மட்டும்தான் இப்போ உங்களுக்கு வந்துட்டு நிறைய விஷயத்துக்கு வெளிச்சத்தை போட்டு கொடுக்கும். சரிங்களா தினமும் இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்றது ரொம்ப நல்லது. தினம் தினம் துலாம்
12:15 ராசி வந்து வீட்டை விட்டு வெளியே போறதுக்கு முன்னாடி வீட்டு பக்கத்துல இருக்கற ஏதாவது ஒரு கோயிலுக்கு போயிட்டு பிரார்த்தனை பண்ணிட்டுதான் அன்றாட வேலைகளை தொடங்கணும். அதுதான் நல்லதும் கூட. அப்படி முடியாத பட்சத்துல வீட்டில இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு ஒரு பூஜைகள் பண்ணி ஒரு தீபம் ஏற்றி வழிபாடு முடிச்சிட்டு அந்த தீப ஒளியை பார்த்து அதாவது நெருப்பை பார்த்து ஏன் பார்த்துட்டு போகணும் அப்படின்னா அந்த தீப ஒளியை ஏன் பார்த்துட்டு போகணும் அப்படின்னா அதுலதாங்க மாசு மாதிரி எந்த ஒரு கஷ்டமும் நஷ்டமும் அதுல நிக்கவே நிக்காது. முக்கியமா தீய சக்திகளுடைய தொடர்பு இருக்கவே இருக்காது முழுக்க முழுக்க தெய்வ சக்தி தெய்வ நடமாட்டம் மட்டும்தான் இருக்கும். அதை பார்த்துட்டு போறப்போ நீங்க போகக்கூடிய காரியங்கள் எல்லாமே கட்டாயமா நல்லதாகவே நடக்கும் அதை உணர்ந்துக்கோங்க. ஏன் அந்த பொண்ணு வந்துட்டு பாரு ஏதாவது ஒரு தீபம் ஏத்து அதை பண்ணு இதை பண்ணு அப்படின்னு சொல்லுதேன்னு நினைச்சிடாதீங்க. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு. அதை நம்ம விரிவா பார்க்க போனோம்னா வீடியோவோட
13:00 லென்த் ரொம்ப ஜாஸ்தியா போயிடுங்க. சோ துலாம் ராசியை பொறுத்தவரைக்கும் இப்படிதான் இருக்க போகுது பொது பலன்கள். இப்ப நம்ம விரிவான நட்சத்திர பலன்களை பார்க்கறப்போ தெளிவு கிடைக்கும்ங்க. அப்படி பார்கற பட்சத்துல துலாம் ராசியை பொறுத்தவரைக்கும் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம். விடா முயற்சிதான் உயிர் உங்களுக்கு உங்களை பொறுத்தவரைக்கும் இந்த கார்த்திகை மாதம் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய மாதமா இருக்கு. குருபகவான் வக்கிரம் அடைந்திருக்கிறதுனால உங்களுடைய செயல்பாடுகள்ல தெளிவிருக்கும் திட்டமிட்டு செயல்படணும். நீங்க நினைச்சத சாதிப்பீங்க. குருபகவானுடைய பார்வை அப்படிங்கறது உங்களுடைய ஜாதகத்தை பொறுத்தவரைக்கும் 12 ஆம் வீடு, இரண்டாம் வீடு, நான்காம் வீடு இந்த இடங்களுக்கு எல்லாம் இருக்கிறதுனால குடும்பத்தில இருந்த சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் சரியாகும். கொடுத்த வாக்கை காப்பாத்த முடியும். ஒரு சிலருக்கு வந்து உடல் நிலையில சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகள் அதிகரிக்காம பார்த்துக்கோங்க. இருந்தாலும் ஆறாம் வீட்டில சஞ்சரிக்கக்கூடிய ராகு பகவானால உங்களுடைய ஆற்றல்கள் வெளிப்படும்.
13:47 துணிச்சலா செயல்பட்டு நினைச்சத சாதிக்க முடியும். அலுவலகம் வியாபாரம் இந்த மாதிரியான இடங்கள்ல் உங்களுக்கு இருந்த தொந்தரவுகள் விளகும். உடல் நிலையில இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும் வழக்கு விவகாரம் கோர்ட்டு கேஸ்ன்னு அழைஞ்சிட்டு இருந்தீங்கன்னா அப்படி அந்த வழக்குகள் எல்லாமே உங்களுக்கு சாதகமாக இருக்கும். விரைய ஸ்தானத்தில கேது சஞ்சரிக்கிறதுனால வரவு செலவுகள் மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கணும். எக்காரணத்தை கொண்டும் துலாம் ராசி சேமிக்க மட்டும் மறந்துராதீங்க. ஒரு சிலருந்து குடும்பத்தோடு கோயில்களுக்கு சென்று பழைய வேண்டுதலை நிறைவேற்றி சந்தோஷப்படுவீங்க. சப்தம ஸ்தானத்தில சனி பகவானுடைய பார்வை இருக்கிறதுனால நண்பர்கள் கிட்ட வாழ்க்கை துணைகிட்ட ரொம்பவே இணக்கமான சூழல் நிலவும் இதனால சந்தோஷமான சூழலை அனுபவிப்பீங்க அதுல சந்தோஷமா தொழில் செய்றீங்களா அதுல சொந்தமா தொழில் செய்றீங்களா வியாபாரத்தில புதிய முதலீடு செய்றதுக்கு முன்னாடி அதை பத்தி நல்லா யோசித்துதான் முதலீடு பண்ணனும் அடுத்ததா மாதம் முழுவதுமே சுக்கிரன் வந்து உங்களுக்கு
14:32 சாதகமா சஞ்சாரம் பண்றதுனால மாதத்துடைய பிற்பகுதியில புதன் பகவானுடைய சஞ்சாரம் உங்களுக்கு சாதகமா இருக்கலாம் சுக்கிரன் புதன் இவங்க ரெண்டு பேருமே சேர்ந்துட்டு குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை இல்லாம போக்குறாங்க. பொன்பொருள் சேர்க்கை உண்டாகுதுங்க. ஒரு சிலருக்கு புதிய சொத்துக்கள் சேரும் வண்டி வாகனங்கள் வாங்கி வசதிகளை பெருக்கி கொள்ள போறீங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் மாதத்துடைய முட்பகுதியில படிப்புல கவனமா இருக்கறது நல்லது. அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் சாதகமான காலகட்டம். மேலிடத்தில எந்த ஒரு குற்றமும் குறையும். உங்களை வந்து நெருங்க விடாம பார்த்துக்கோங்க. எல்லாமே கவனமா இருங்க. எல்லாத்துலயுமே கவனமா இருங்க. யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. அதே மாதிரி தொண்டர்களுடைய செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுங்க. விவசாயிகளை பொறுத்தவரைக்கும் சாதகமான காலகட்டம்தான். இருந்தாலும் விளைச்சொல்ல கொஞ்சம் கவனமா இருங்க. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டரமம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னா நவம்பர் மாதம்
15:18 24 27 டிசம்பர் மாதம் 6 9 15 இந்த நாட்கள சுபகாரினுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாள்ல நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது ராஜ ராஜேஸ்வரியுடைய வழிபாட்டினால வாழ்க்கையில வளம் உண்டாகும். அடுத்ததா சுவாதி நட்சத்திரம் சத்தமில்லாமல் வெற்றி பெறக்கூடிய உங்களுக்கு கார்த்திகை மாதம் முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமா இருக்குங்க. உங்களுடைய நட்சத்திர நாதன் ராகு பகவான் ஆறாம் இடத்தில சஞ்சரிக்கிறதுனால உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் அல்லது எவ்வளவு பெரிய நெருக்கடியா இருக்கட்டும் அதிலிருந்து வெளியே வர முடியும். வருமானம் அதிகரிக்கும். தொழில் இருந்த போட்டியாளர்கள் விலகி போவாங்க. உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் விலகும். நினைச்ச வேலையை நினைச்ச மாதிரி நடத்தி முடிக்க முடியும். வெளியூர் பயணம் உங்களுக்கு லாபம் கொடுக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். நினைச்சத சாதிக்கக்கூடிய சூழல் ஏற்படும். இருந்தாலும் ஐந்தாம் இடத்தில் வரக்கூடிய சனி பகவான் உங்க ராசிக்கு சப்தம ஸ்தானம், லாபஸ்தானம் குடும்ப ஸ்தானத்தை
16:03 பார்க்கறதுனால பணவரவுல கவனமா இருங்க. வரவுகள் இருக்கும். அது வந்து வீண் செலவு விரைய செலவு போகாம பார்த்துக்கிறது திட்டமிட்டு செயல்படுறது உங்களுடைய பொறுப்பு அதே மாதிரி உறவுகளையும் அனுசரிச்சு செல்வது நல்லதுங்க. இரண்டாம் இடத்தில சூரிய பகவான் சஞ்சரிக்கிறதுனால அடிக்கடி கோபம் வரும். இதனால தேவையில்லாத வார்த்தைகளை ரொம்ப வந்துட்டு கொதிச்சு பேசிருவீங்க. அதுவே உங்களுக்கு எதிரியா மாறவறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால வார்த்தைகள்ல நிதானமா இருங்க. இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் நண்பர்களிடம் வாழ்க்கை துணைக்கிட்டையும் இணக்கமா இருந்துக்கோங்க. விட்டு கொடுத்து செல்வதும் மேலும் உங்களுக்கு நன்மையை தரும். இஷ்ட தெய்வத்துடைய வழிபாடு உங்களை பாதுகாக்கும். மேலும் சுக்கர பகவானும் சரி புதன் பகவானும் சரி இரண்டு பேருமே உங்களுக்கு சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறதுனால உங்களுடைய விருப்பங்கள் பூர்த்தியாகும். தேவையற்ற ஆசைகள் மட்டும் இடம் கொடுக்காதீங்க. நேர்மையான வருமானத்தில் கவனம் செலுத்துவது உங்களுடைய முயற்சிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில முன்னேற்றம் அடைவீங்க. விவசாயிகளை பொறுத்தவரைக்கும் விளைச்சல
16:48 கவனமா இருக்கணும். அரசு பணியாளர்கள் நேர்மையாக நடந்து கொள்வது அவசியம். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்பில கூடுதல் கவனம் தேவைப்படுதுங்க. உழைப்பாளர்களுக்கு தேவைக்கேற்ற வருவாய் கிடைக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்மம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ன்னு பார்த்தோம்னா நவம்பர் மாதம் 24 டிசம்பர்ல 4ஆ 13 15 இந்த நாட்கள சுப நிகழ்ச்சிகளுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாட்கள நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். அதுவே பரிகாரம் அப்படிங்கறது துர்க்கை யம்மனை வழிபாடு செய்ய துன்பங்கள் விளகும். அடுத்ததா விசாக நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம். திட்டமிட்டு செயல்படக்கூடிய சக்தி கொண்ட உங்களுக்கு கார்த்திகை மாதம் அப்படிங்கறது யோகமான காலகட்டம். நட்சத்திர நாதன் குருபகவானால உங்க செயல்பாடுகள்ல சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டீங்க அப்படின்னா சங்கடங்களுக்கு ஆளாகம தப்பிச்சுக்கலாம். ஜீவன ஸ்தானத்தில செவ்வாய் பகவானோடு சஞ்சரிப்பு
17:34 அப்படிங்கறது வியாபாரத்தை விரிவுபடுத்துவதுக்கு உதவியா இருக்கு. முதலீடு ஏதாவது பண்றீங்க அப்படின்னாக்க முன்னுக்கு பின் முரணா யோசிக்காம பழக்கட்ட யோசனைக்கு அப்புறம்தான் முதலீடு பண்ணனும். லாபஸ்தானத்தில சனி பகவானுடைய சஞ்சாரம் இருக்கிறதுனால வருமானத்தில கவனமா இருங்க. வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம் கடன் வாங்குறதும் வேண்டாம். குடும்பத்தை பொறுத்தவரைக்கும் குடும்பத்தில் இருக்கவங்கள அனுசரிச்சு நடந்துக்கோங்க. பிள்ளைகளுடைய நலன்ல அக்கரை எடுத்துக்கோங்க. அடுத்து பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு கூட தீர்வு கிடைக்கும். ராகுவை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு உங்களுடைய செயல்பாடுகளுக்கு ஆதரவா இருக்காருங்க. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எல்லா விதங்களிலும் எல்லா திசைகளில இருந்தும் உங்களை ராகு பகவான் பாதுகாத்து நிக்கிறாருங்க. முன்னாடி சொன்னேன் இல்லைங்களா அப்படி இருங்க இப்படி இருங்கன்னு அது எல்லாத்துக்கும் இவரு காரண கர்த்தாவா நின்னு சரி செஞ்சு கொடுக்கிறார். யாருடா அது துலாம்
18:21 ராசிக்காரங்களுக்கு கை வச்சதுங்கிற மாதிரி ஏன்னா ராகு பகவான் பாம்பு கிரகம் இல்லையா பாம்பு கண்டா படையே நடுக்கும். அந்த மாதிரி 10 கிரகங்களும் வந்துட்டு நடுங்க ஆரம்பிச்சிருவாங்க. உடல்நிலைக்கு முக்கியத்துவம் வழக்குகள் வெற்றியாக மாறும். அரசியல்வாதிகளை பொறுத்தவரைக்கும் உங்களுடைய செல்வாக்கு உயரும். பொது வாழ்க்கையில் இருக்கவங்களுக்கு வார்த்தைகளை மட்டும் கவனமா பயன்படுத்துங்க. வரவு செலவுகள்ல எச்சரிக்கையா இருப்பது ரொம்ப நல்லது. அதே மாதிரி யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்காதீங்க. அது வந்து இழப்புகள்ல கொண்டு போய் சேர்த்துரும். இரவு நேர பயணங்கள்ல கொஞ்சம் கவனமா இருங்க. விழிப்புணர்வு அவசியம் அரசு பணியாளர்கள் இல்ல தனியார் துறையில் இருக்கறவங்களுக்கு பொறுப்போடு செயல்படுங்க எல்லா விதங்களுமே நன்மைகள் தொடரும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் மாதத்துறை முட்பகுதியில் படிப்புல கவனம் தேவை உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்மம் அப்படிங்கறது அந்த நாட்கள்ல வந்து நீங்க எங்கும் கவனம் எதிலும் கவனம் அதுவே அதிஷ்டம் தரக்கூடிய நாட்கள்ு பார்த்தோம்னா
19:06 நவம்பர் மாதத்தில 24 30 டிசம்பர் மாதத்தை பொறுத்தவரைக்கும் 3ஆ 12 15 இந்த நாட்கள்ல சுப நிகழ்ச்சியுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. இந்த நாள்ல நீங்க செய்யக்கூடிய வேலைகள் பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் அணுதினமும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்னு பார்த்தோம்னா பரிகாரம்னு பார்த்தோம்னா மீனாட்சி அம்மனை வழிபாடு செய்ய நன்மைகள் அதிகரிக்கும். ஆக மொத்தத்துல துலாம் ராசியை பொறுத்தவரைக்கும் எவ்வளவோ கஷ்டங்களை கடந்து வந்துட்டீங்க. ஆனா இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது அப்படி ஒரு கஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கவே இல்லைங்க. நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்கு. எந்தெந்த விஷயங்களை நீங்க எப்படி இருக்கணும்ங்கறதையும் உணர்த்தி இருக்கு. முன்ன இருந்தத கம்பேர் பண்ணி பார்கறப்போ துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் முடிஞ்சது. சத்தியமா யோகமான காலம்தான். எல்லாத்தையும் சரி செய்யக்கூடிய விதத்துல இருக்கு இல்லைங்களா எதுவுமே கை மீறி போகல. எதுவுமே தலைக்கு மேல போகல. எவ்வளவு நெருக்கடிகளை சந்திச்சிட்டு இருந்தீங்க எல்லாமே சரியாக போகுது. அதுவும் இந்த கார்த்திகை மாதத்திலே நினைச்சது எல்லாமே
19:51 கை கூடி வரும். கடவுளுடைய அனுக்கிரகம் முழுசா இருக்கு. இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா வீடியோக்கு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மேலும் பிடிச்சிருந்தா பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. வந்த கஷ்டங்கள் கரையட்டும். வரக்கூடிய கஷ்டங்கள் விலகட்டும். கடவுள் மட்டும் உங்களுக்கு எப்பவுமே துணை வரட்டும். வாழ்த்துக்கள் வாழ்க்க வளமோடு நலமோடு நன்றி வணக்கம்.