0:00 பண்பும் பழமையும் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்ங்க. இந்த வீடியோல என்னை பேச வைத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு முதல் வணக்கத்தை தெரிவிச்சுக்கிட்டு வீடியோக்குள்ள போலாங்களா நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிட்டே உங்களால முடிஞ்சதுன்னா கமெண்ட் பாக்ஸ்ல ஒரு முறை கமெண்ட் பண்ணுங்க. ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம். என்னை காக்கும் கந்தா கடம்பா கதிர்வேலா நீதான் என்னை நம்பி இந்த வீடியோ பதிவை பார்க்க வந்தவங்களை கூட நின்னு காப்பாத்தணும். அவங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் விலகி சந்தோஷமா இருக்க நீதான் ஐயா பொறுப்பு. ஜோதிடம் என்னும் மகா கலை மூலம் நாம் இன்று இணைந்துள்ளோம். இந்த கலையில மிதுன ராசி நேயர்களுக்கு என்னெல்லாம் நடக்கப்போகுது? அவங்க வாழ்க்கை நல்லபடியா மாறுமா மாறாதா? அவங்க பிழைக்க ஒரு வழியாவது இனி இருக்கா?
0:45 என அனைத்து விஷயங்களையும் விலாவரியா பேச போறோங்க. அதற்கு முன்னாடி சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்படியே பெல் பட்டனையும் கொடுத்து ஆல் அப்படிங்கிற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து வைங்க. அப்பதான் நாங்க போடுற ஒவ்வொரு பதிவும் உடனே உங்ககிட்ட வரும். இப்ப பாத்தீங்கன்னா 2025 கார்த்திகை மாத பலாபலன்கள் எப்படி இருக்கப்போகுது என்ன செய்யலாம் அப்படிங்கறத பத்தி ஒவ்வொரு ராசிக்கும் விரிவாக தெளிவாக நம்ம பார்க்க போறோங்க. அந்த வகையில இப்ப கார்த்திகை மாதம் அப்படின்னாலே மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த மாதம் கார்த்திகை மாதம். ஏன்னா சூரிய பகவான் பாத்தீங்கன்னா காலசக்கரத்தின் எட்டாம் இடத்தில இருந்து அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான மாதமா இந்த மாதம் அப்படிங்கறது அமைஞ்சிருக்குது. அதுலையும் மிக மிக சிறப்பு அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா திருவண்ணாமலை தீபம். கார்த்திகை மாசம்னால எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரக்கூடியது தீபம் தாங்க.
1:32 அப்ப திருவண்ணாமலை தீபம் அப்படிங்கறது அது ஒரு பக்கம் இருந்தாலும் பரணி தீபம் அப்படிங்கறது நம்ம வீட்ல ஏத்துறது உண்டு. இந்த பரணி தீபம் அப்படின்னு பார்த்தோம்னாக்க நம்மளுடைய முன்னோர்கள் பித்துருக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அதேபோல குடும்பத்தின் மகிழ்ச்சி, சுபிக்சம், செல்வாக்கு, வசதி, லட்சுமி கடாட்சம் போன்ற அனைத்து விஷயங்களுக்குமே பார்த்தீங்கன்னா அந்த தீபம் ஏத்துறது ஏத்தி வழிபாடு செய்றது அப்படிங்கறது வந்து மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்குதுங்க. இப்போ இந்த கார்த்திகை மாதத்துல இந்த கார்த்திகை தீபம் அப்படிங்கறது பாத்தீங்கன்னா கொண்டாடப்பட வேண்டிய மிகப்பெரிய முக்கியமான நிகழ்வாக இது இருக்குது. அதுலையும் குறிப்பா திருவண்ணாமலை தீபத்தை பார்கறது அப்படிங்கறது வந்து மிகப்பெரிய புண்ணிய பாக்கியம் அப்படிங்கறது கிடைக்குங்க நீங்க பாத்தீங்கன்னா அதேபோல முன்னோர்கள் சாப நிவர்த்தி சரியாகும் அப்படிங்கிறதும் திருமணம் சார்ந்த விஷயங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி
2:17 சார்ந்த விஷயங்கள் குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே பார்த்தீங்கன்னாக்க வேண்டுதலோடு இந்த திருவண்ணாமலை தீபம் கிரிவளம் சென்று பார்க்கையில அது அற்புதமாக உங்களுக்கு அங்க இருக்கக்கூடிய சித்தர்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாருமே அருள் பாலித்து உங்களுக்கு அதற்கான விஷயங்கள் நீங்க என்ன நோக்கம் என்ன எண்ணத்திற்காக சென்றீங்களோ அந்த விஷயம் நிறைவிடுவதற்கான அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான விஷயம்ங்க அப்படிங்கறது இந்த திருவண்ணாமலை தீபம் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய மிக சிறப்பாக கருதப்படுதுங்க சதா நேரமும் ஒரு யோசனை என்னதான் அப்படி யோசிப்பீங்களோ தெரியலங்க ஒரு விஷயத்தை யோசிக்க ஆரம்பிச்சா அதுல வந்து ஆதி முதல் அந்தம் வரைக்கும் அதுக்கு ஒரு கிளாரிட்டி கிடைக்கிற வரைக்கும் விடமாட்டீங்க ரா பகலா திட்டம் தீட்ட கூடியவங்க என்னதான் உங்களுக்கு அதிபதி புதன் பகவானா
3:03 இருந்தாலும் உங்கள புத்தியை இப்படி ஏங்க ஷார்ப்பா வச்சிட்டு இருக்கீங்க. சமயோகித புத்தியில எல்லாம் இவங்களை வந்து அடிச்சுக்க ஆட்களே கிடையாது. அதான் இவங்களுக்கு நிகர் இவங்கதான். மிதுன ராசி ஒருத்தன் வந்துட்டு கஷ்டப்படுது ஏதாவது ஒரு திட்டம் போட்டு வராங்கன்னு வைங்களேன் அவங்களை அதுல மாட்ட விட்டுட்டு இவங்க நகந்துருவாங்க. அப்புறம் அவன் யோசிப்பான் பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். அவன் எக்கேடோ கெட்டு போகட்டும் நம்ம விட்டுருக்கலாம். அவனை நம்ம சீண்டாம இருந்திருக்கலாம் இப்படின்னு உங்க எதிரிகள் வந்து யோசிப்பாங்க. பயங்கரமா திட்டம் திட்டுவீங்க. ஆனா அது வந்து அவங்க தலையில அவங்களே மண்ணல்லி போடக்கூடிய கணக்குதான். மிதுனத்தை பொறுத்தவரைக்கும் யாராலையுமே சீண்ட முடியாது. தொடணும்னு நினைச்சா அவங்க வந்து 10 ஜென்மம் எடுத்துட்டு வரணுங்க. அந்த அளவுக்கு மிதுன ராசி ரொம்ப வலிமையானவங்க. ஆனாலும் ஓவர் ஓவர் திங்கிங் ஓவர் திங்கிங்
3:49 நல்லா கொள்ளிக்கட்டை எடுத்து தலையை சொரிஞ்ச கணக்கா நாங்க கரெக்டா திட்டம் தீட்டுவோங்க. கரெக்டா வந்துட்டு பிளான் பண்ணி அடிச்சிருவோம். திடீர்னு கடைசிில முடியற நேரத்துக்கு நாங்களே கொஞ்சம் ஓவரா இது இன்னும் இப்படி பண்ணா இன்னும் நல்லா இருக்கும் அப்படிங்கற மாதிரி கொஞ்சம் பண்ணி விட்டுருவோம். என்ன பண்றது மிதுனத்துடைய குணாதிசயம் இதுதான். இருந்தாலும் பரவாயில்ல நாங்க ஜாலியா தான் இருக்கோம். இதுதான் மிதுன ராசியுடைய குணம். ஜாலினா என்ன சொல்றேன்னா வரக்கூடிய கஷ்டத்தையும் சரி வந்த கஷ்டத்தையும் சரி ஒரு மாதிரி ஹேண்டில் பண்ணிட்டு வெளிய வந்துட்டு நம்மகிட்ட இருக்கும். எதுவும் நமக்கு நிரந்தரம் இல்லை. அப்படிங்கறத உணர்ந்து தானே நீங்க வந்து செயல்பட்டுக்கிட்டு இருக்கீங்க. ஆனா எல்லாத்துக்கும் மேல தன்னம்பிக்கை தைரியம் அப்படிங்கறது இவங்களுக்கு பிறவியிலேயே இருக்கு. டேய் எவனா இருந்தா எனக்கு என்ன போங்கடா அந்த பக்கம் அப்படிங்கறவங்கதான் இவங்க. இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு வளம்
4:35 பெறக்கூடிய மிதுன ராசிக்கு கதவை தட்டும் வேஷ யோகம். மிதுன ராசிக்கு கார்த்திகை மாதத்துடைய பலன்கள் என்ன? இந்த யோகங்கள் எல்லாமே மிதுன ராசிக்கு அமோகமான வாழ்க்கையை ஏற்படுத்த போகுதா எந்த விஷயங்களை தொடர்ந்து செய்யணும் எந்த விஷயங்களை அறவே விட்டரணும். இவங்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் என்ன? செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? நிச்சயமா இந்த வீடியோ பதிவை பார்த்து முடிக்கிறப்ப உங்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் மனசுக்கு கிடைச்சிருக்கும். சஞ்சலப்பட்ட மனசு யோசனை யோசனை யோசனை என்ன பண்ண போறோம் ஏன் நம்ம இப்படி பண்ணோம் அப்படின்னு ஆரம்பிச்சு அவங்க ஏன் பண்ணாங்க அவன் ஏன் இப்படி பண்ணி இருக்க கூடாது அப்படிங்கற வரைக்கும் திங்கிங் ஒரு விதத்துல வந்து திங்கிங் வந்து உங்களுக்கு சாதகமா இருந்தாலும் பல நேரங்கள் வந்து ஓவர் திங்கிங் உங்களை வந்துட்டு தோல்வியில போய் தள்ளி இருக்குங்க அதை மட்டும் கொஞ்சம் இந்த
5:20 காலகட்டத்துல மிதுன ராசிக்காரங்க குறைச்சுக்கணும். தேவைக்கு யோசிங்க தேவை இல்லாம யோசிக்காதீங்க இந்த வேஷ யோகம் அது எதனால உருவாகி இருக்கு அப்படின்னா என்ன அப்படின்னா இப்ப யோசிப்பீங்க ஸ்ரீ மங்களகரமான விசுவா வசு வருடம் நவம்பர் மாதம் 17ஆம் தேதி நமக்கு திங்கட்கிழமைங்க கார்த்திகை மாதம் தொடங்குச்சு. இந்த தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில நவ கிரகங்களுடைய சஞ்சாரத்தை ஆராய்ந்து பார்க்கிறப்போ ராசியிலிருந்து வந்து குருபகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில பெயற்சி ஆயிட்டாருங்க. அடுத்து உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தில கேது பகவான் இருக்கக்கூடிய நிலை இருக்குது. அடுத்து பாருங்க வேறு என்ன நிகழ்வுகள் இருக்குது அப்படின்னு பார்த்தோம்னா ராசிக்கு நான்காம் இடத்தில சுக்கிர பகவான் ஆட்சி பெற்று அற்புதமாய் இருக்காருங்க. ஐந்தாம் இடத்தில சூரிய பகவான் செவ்வாய் பகவான்
6:07 புதன் பகவான் அப்படிங்கிற கிரகங்கள் மூன்று கிரகங்கள் இணைவு பெற்று இருக்குதுங்க. ஒன்பதாம் இடம் அப்படின்னு சொல்லக்கூடிய உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடத்தில யார் இருக்கிறது அப்படிங்கறத பார்க்கணும். ராகு பகவான் இருக்காருங்க. 10ல சனி பகவான் கிரகங்களுடைய அமைப்பு இப்படி இருக்கு. இப்போ இந்த யோகம் அப்படின்னு சொன்னேன் இல்லையா இந்த கார்த்திகை மாதத்துல நவ கிரகங்களுடைய தலைவன்னு சொல்லக்கூடிய சூரிய பகவான் விருச்சிக ராசிக்கு பயணமானாருங்க. அதே விருச்சிக ராசியில ஆல்ரெடி புதன் பகவான் இருக்கிறதுனால இவங்க இரண்டு பேருடைய கூட்டணையினால ஆதித்திய ராஜ யோகம் உருவாச்சு. இது ஒன்னு அதே சூரிய பகவானாலதான் இந்த வேஷ யோகமும் உருவாகி இருக்குது. அதாவது இந்த மாதத்துல சூரியன் வந்துட்டு எந்த ராசியில இருக்காரோ அவருக்கு அடுத்த இரண்டாம் வீட்டில சுக்கிரன் சஞ்சரிக்கிறதுதான் வேஷ யோகம்னு சொல்லுவோம். இந்த வேசி யோகமானது வந்து
6:52 பாத்தீங்கன்னா நம்மளுடைய ஆன்மாவை குறிக்கக்கூடிய சூரியனால உருவாக்கப்பட்டது. ஒரு நபருடைய ஜனன ஜாதகத்தை பார்க்கிறப்போ அந்த கட்டத்துல சூரியன் இருக்கக்கூடிய ராசிக்கு அடுத்த இடத்துலதான் சுக்கிரன் இருக்கக்கூடாதுங்க. ராகு இருக்கக்கூடாது, கேது இருக்கக்கூடாது. இந்த மூன்று கிரகங்கள் தவிர்த்து வேற எந்த கிரகங்கள் வந்து தனியா இருந்தாலும் சரி இல்ல மத்த கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும் சரி இந்த ஜாதகத்தை சேர்ந்தவங்களுக்கு வேஷ யோகம் பள்ளிக்கும். இந்த வேஷ யோகத்தினால என்ன பலன்னு பார்த்தோம்னா எந்த ஒரு விஷயமா இருக்கட்டும் மிக சரியா திட்டமிட்டு அதற்குண்டான பணிகளை செய்து வெற்றி பெறக்கூடிய அம்சத்தை தான் இந்த யோகம் கொடுக்கும். அதே மாதிரி இந்த கார்த்திகை மாதத்தில இந்த யோகங்களை தாண்டி இன்னொரு சிறப்பு இருக்குங்க. ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரம் வருங்க. அதுவே இந்த கார்த்திகை மாதத்தில வரக்கூடிய இந்த கார்த்திகை நட்சத்திரம் அப்படிங்கறது தனிச்சிறப்பு பெற்றது. இதை நாங்க
7:38 ஜோதிடத்தில திருக்கார்த்திகை அப்படின்னு சொல்லுவோங்க. இந்த நாள்ல முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்ய விரதம் இருக்க அந்த முத்துக்குமரனை வழிபாடு செய்ய முத்தான வாழ்க்கை நமக்கு அமைந்திடும். இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்ங்க. இந்த நாள்ல நம்ம எப்படி எல்லாம் வழிபாடு செய்யணுங்கிறத நம்ம எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் முதல்ல வந்துட்டு இந்த மிதுன ராசிக்காரங்களுடைய பரிகாரம் சொல்லிடுறேன். கார்த்திகை மாதம் முருகப்பெருமானுக்கு உரிய மாதம்னு சொல்லிட்டேன். ரொம்ப நல்ல வாழ்க்கை அமையணும். முடியில நிறைய தோல்விகளை சந்திச்சோம். வெற்றி கிடைக்குமா வெற்றிவேல் முருகனே கிடை பாருங்க. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதம் இருந்து நம்ம சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை ஒரு 108 முறை சொல்லுங்க. நல்ல மாற்றத்தை உணர முடியும். அது என்ன மந்திரம்? ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அதிகாலையிலிருந்து
8:24 குளிச்சு முடிச்சுட்டு உங்க வீட்டில இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து முதல்ல விநாயக பெருமானை வழிபாடு செய்யுங்க. அடுத்து உங்க குலதெய்வத்தை மனசார நினைச்சுக்கோங்க. அடுத்ததா முருகப்பெருமானுடைய படத்திற்கு செவ்வரலி மாலையிட்டு முருகப்பெருமானுக்கு உரிதான திருநீரை எடுத்துக்கோங்க. அந்த திருநீர்ல ஓம் நமோ குமாராய நமக அப்படின்னு சொல்லிட்டு எழுதிருங்க. எழுதிட்டு அந்த அத தரையில எழுதினாலும் சரி இல்ல நீங்க ஒரு ஒரு தட்டத்தில எழுதினாலும் சரிங்க அந்த மந்திரத்தை ஓம் நமோ குமாராய நமகன்னு நீங்க சொல்றப்போ அந்த மந்திரத்தின் மீது உங்களுடைய ஆழ்காட்டி விரல் போகணுங்க இந்த குழந்தை பிள்ளைகள் எல்லாம் வந்து வரிவரியா படிப்பாங்க இல்லையா புத்தகத்தை இந்த மாதிரி ஒவ்வொரு முறையும் ஓம் குமாராய நமக அப்படின்னு சொல்லிட்டு வச்சு படிக்கணுங்க 108 முறை சொல்லிட்டு முருகப்பெருமான் நினைச்சட்டு நீங்க அன்றாட வேலைகளை
9:10 தொடங்குறப்ப நல்ல மாற்றம் இருக்கும். மாற்றம்னா என்ன தெரியுமா? நம்ம தலையில என்ன எழுதி இருக்கு நம்ம தலைவிதி மாறாதா? நம்ம தலை எழுத்து மாறாதான்னு நினைப்போம் இல்லையா அந்த தலைவிதியை மாற்றக்கூடிய அம்சத்தை முருகப்பெருமான் கொடுப்பாருங்க. சாதாரண ஆள் இல்ல முருகப்பெருமான் புரியுதுங்களா இந்த பரிகாரம் வந்துட்டு மிதுன ராசிக்கு ரொம்ப உடனே பலன் கொடுக்கக்கூடிய உகத்தான பரிகாரம் கரெக்டாஃபாலோ பண்ணி பாருங்க. சரிங்க. இப்ப வந்து கார்த்திகை மாதத்துடைய பலன்களை பார்க்கலாம். மிதுன ராசியை பொறுத்தவரைக்கும் இப்ப இந்த வீடியோ பதிவை பார்க்கக்கூடிய இந்த தருணத்தில ஒரு ரெக்வஸ்ட் வைக்கிறேங்க. ஓம் நமோ குமாராய நமஹ நம்ம முருகப்பெருமானுடைய நாமத்தை சொன்னோம் இல்லையா முடிஞ்சதுனாக்க அந்த மந்திரச் சொல்லை மூன்று முறை எங்க நீங்க இந்த வீடியோ பதிவை எங்க பார்த்தாலும் சரி ஒரு பேனா எடுத்து எழுதுங்க இல்லையா கமெண்ட் பாக்ஸ்ல மூன்று முறை பதிவிடுங்க அதை சொல்லிக்கிட்டே நான் அதை வந்து
9:56 உச்சரிச்சுிட்டேதான் நீங்க வந்து அதுல டைப் பண்றதோ இல்ல எழுதுறதோ இருக்கணும் செஞ்சு பாருங்க முருகப்பெருமானுடைய அனுக்கிரகம் உங்களுக்கு மனசுக்குள்ள இப்ப வரும் இந்த செகண்ட் உங்களுக்குள்ள வரும் இப்போ கார்த்திகை மாதம் அப்படிங்கறது நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 16 ஆம் தேதி வரைக்கும் சஞ்சரிக்கக்கூடிய கிரகங்களை பொறுத்துதான் உங்களுக்கான பலன்கள் நவகிரகங்களுடைய தலைவர்ன்னு சொல்லக்கூடிய சூரிய பகவான் விருச்சிக ராசியில் இருக்கிறதும் இது வந்து உங்களுக்கு எப்படின்னா ஆரோக்கியம் தொழில் உறவு ஆற்றல் அதிர்ஷ்டம் எல்லா வகையிலயுமே கை கொடுக்குங்க அதிர்ஷ்டம்னா சாதாரண அதிர்ஷ்டம் இல்லைங்க அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்னு சொல்லக்கூடிய அளவுக்கு சாதகமான அமைப்பு நிக்குது. மிதுன ராசியை பொறுத்தவரைக்கும் ரொம்ப தைரியசாலிங்க. ஓகேங்களா உங்களுடைய தைரியத்தினாலதான் உங்களுடைய செயல்பாடுகள் எல்லாமே சிறப்பான வெற்றியை கொடுக்கும். இந்த மாதம் தொடக்கமே
10:42 பாருங்க வெற்றியோடதான் தொடங்குது. ஏன்னா வெற்றியுள்ள முருகனுடைய அனுக்கிரகம் உங்களை தொடர்ந்து வரும். சாதனை படைக்க முடியும். சாதாரண வெற்றியா இருக்காதுங்க. சாதனையாளர்களா வருவீங்க. வெற்றிங்கிறது எல்லாருக்கும் கிடைக்கும். ஆனால் வெற்றிவேல் முருகப்பெருமானுடைய அருள் ஆசியினால சாதனை படைக்க போறீங்க. சொந்தமா தொழில் செய்யக்கூடிய மிதுன ராசிக்காரங்களே வியாபாரத்தில புதிய சிந்தனைகளை செயல்படுத்தி உங்களுடைய லாபத்தை அதிகப்படுத்துவீங்க இந்த மாதம் முழுக்கவே கூலி வேலை செய்றவங்கள்ல இருந்து என்ன பிசினஸ் வேணா பண்ணுங்க என்ன தொழில் பண்ணுங்க ஆணா இருங்க பெண்ணா இருங்க இல்ல வயதானவங்களா இருங்க இல்ல பிள்ளைகளா கூட இருங்க என்ன நீங்க தொழில் செய்தாலும் சரி லாபம் அதிகரிக்கும் நிதிநிலையில முன்னேற்றம் உண்டு கழுத்து நிறைய கடன் இருக்கு 10 பைசா இல்லாம அதிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உண்டு இந்த மாதம் முழுக்கவே வாழ்க்கை துணையை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு நேர் மையா
11:28 நடந்துப்பாங்க. உங்களுடைய மனசு பிடிச்ச மாதிரி நடந்துப்பாங்க. அன்பாவும் ஆதரவாவும் இருப்பாங்க. உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும் உங்களுடைய ஆற்றல் வந்துட்டு அதிகரிக்கும். உங்களுடைய துணிச்சலான செயல்பாடு உங்களுக்கு மட்டும் உற்சாகத்தை கொடுக்கிறது மட்டுமில்லாம குடும்பத்தாருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்களை சுத்தி இருக்கக்கூடிய எல்லாருக்கும் உற்சாகம் பரவும். நம்பிக்கையோடு நீங்க செய்யக்கூடிய தொழில மன நிறைவை தரக்கூடிய அளவுக்கு உங்களுடைய முயற்சி வெற்றியை ஏற்படுத்தும். நடக்கிறது எல்லாமே நல்லதாகவே நடக்கும். எத நினைச்சு வருத்தப்பட்டீங்களோ எதெல்லாம் உங்களுக்கு கவலையை கொடுத்துச்சோ போன மாதம் வரைக்கும் அதெல்லாம் இப்ப சரியாக போகுதுங்க புரியுதுங்களா குறிப்பா மிதுன ராசிக்காரங்களுக்கு ரொம்ப சுறுசுறுப்பா இருப்பீங்க இந்த மாதம் முழுக்கவே குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாத்தையுமே சரி செஞ்சிருவீங்க நிதி நிலை சீரா இருக்க போகுது கடன் தீரும் கஷ்டம் தீரும் மனசுக்கு நிம்மதி
12:14 கிடைக்கும் எல்லா விஷயத்தையுமே தேடி தேடி சரி செய்ய போறீங்க வேலை செய்யக்கூடிய இடத்தில உங்களை அனுசரணையா மத்தவங்க பார்த்துப்பாங்க முன் கோபத்தை மட்டும் மிதுன ராசி குறைச்சுக்கணும் மத்தபடி இந்த காலகட்டத்தில பிரச்சனை ஏதோ பெருசா வராதுங்க. இருக்கற பிரச்சனையும் சரியாகத்தான் செய்யும். வியாபாரத்துல புதுசா முதலீடு செய்றதை மட்டும் கொஞ்சம் பார்த்து கவனமா பண்ணுங்க. மத்தபடி நிதி நெருக்கடி அப்படிங்கறது மிதுன ராசிக்கு இந்த காலகட்டத்தில இல்லை. சின்ன சின்ன தொழில் செய்றவங்களுக்கு கூட நல்ல வருவாயை பார்க்க முடியும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் கல்வியில நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகள் எல்லாமே சுலபமா சரி செஞ்சிருவீங்க. உங்களை பொறுத்தவரைக்கும் குடும்பத்தை ஆளும் பெண்களுக்குதான் முதல் ரெக்வஸ்ட்ங்க. தினம்தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய குடும்பத்தில நன்மைகள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடக்கும். மங்களகரமான செய்திகள் மட்டுமே உங்க
13:00 காதுக்கு வரும். இப்ப பார்த்து பொது பலனே வந்து மிதுன ராசிக்கு ஒரு மாதிரியான நிறைவை கொடுத்திருக்கும். இப்ப நம்ம நட்சத்திர பலன்களை பார்க்கலாங்க. மிதுன ராசியை பொறுத்தவரைக்கும் மிருக சீர்ஷ நட்சத்திரத்தில் இருக்கக்கூடிய மூன்றாம் பாதம், நான்காம் பாதம், திருவாதிரை நட்சத்திரம், புனர்பூச நட்சத்திரத்தில் இருக்கக்கூடிய ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம். இந்த நட்சத்திரக்காரனுடைய ஆட்சிதான் நம்ம வந்து பொதுவா மிதுன ராசின்னு சொல்லுவோம். இதுல முதல்ல இருக்கக்கூடிய மிருக சீரிஷ நட்சத்திரம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம். அறிவு, துணிவு இதுதான் இவங்களுடைய அடையாளம். உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது அதிர்ஷ்டமான மாதமா பிறந்திருக்கு. குருபகவான் வக்கிரம் அடைந்திருக்கக்கூடிய நிலையில ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவானால உங்களுடைய செல்வாக்கு உயரும். குரு ஒதுங்கினாரா சனி எழறாருங்க. உங்களுக்கு தொல்லை கொடுக்க இல்லை உங்களை தூக்கி பிடிக்க போகுது.
13:46 வாழ்க்கையில ஈடுபட்டுட்டு இருக்கக்கூடிய மிதுன ராசிக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சொந்தமா தொழில் செய்யக்கூடிய மிதுன ராசிக்கு தொழில் வியாபாரத்தில வருமானம் அதிகரிக்கும். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியாக மாறும். உடல் நிலையிலிருந்து வந்த பாதிப்புகள் விளகும். போட்டியாளர்கள் பலம் இழந்து காணப்படுவாங்க. இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும். இதனால கோயில் வழிபாட்டை மேற்கொள்வீங்க. மத்தவங்களால கவனம் சிதராம நல்ல வாய்ப்புகளை பயன்படுத்துவீங்க. ஆனா செவ்வாய் பகவானை பொறுத்தவரைக்கும் குடும்பத்தில சின்ன சின்ன நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு. அவரை சரி செய்யும்னாக்க முருகப்பெருமானை வழிபாடு செஞ்சா போதும். அதுவும் சரியாயிடும். முக்கியமா உங்களுடைய ராசிநாதன் புதன் வந்து வக்ர நிவர்த்தி அடையறதுனால எந்த விஷயத்தை செய்றதா இருந்தாலும் சரிங்க. அதுவரைக்கும் கொஞ்சம் சிந்தித்து செயல்படணும். ஆனா பணவரவுக்கு
14:31 எந்த ஒரு குறையும் இருக்காது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தனிப்பட்ட அந்த வேலை நடக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாக இருக்கும். புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க. உங்களுடைய முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாறும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் படிப்புல அதிக அக்கரை எடுத்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லதுங்க. அதே நேரத்துல விவசாயிகளை பொறுத்தவரைக்கும் விளைச்சல ரொம்ப கவனமா இருங்க. உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்னு பார்த்தோம்னா நவம்பர் மாதம் 23 27 டிசம்பர்ல 9 14 இந்த நாட்கள நீங்க செய்யக்கூடிய சுப காரியங்களோட தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க. பல மடங்கு நன்மைகளை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அணு தினமும் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்ய நன்மைகள் உண்டாகும். அணுதினமும் முடியாதவங்க சனிக்கிழமைகளலயாவது சனீஸ்வர பகவானுக்கு
15:16 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நன்மைகள் தொடரும். அடுத்து திருவாதிரை நட்சத்திரம் நினைச்சதை சாதிக்கணும். இதுதான் இவங்களுடைய பிறவி குணம். உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது யோகமான மாதமா பிறந்திருக்கு. மாதம் முழுவதுமே சூரிய பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கிறதுனால உங்களுடைய செல்வாக்கு உயரும். நினைச்ச வேலை நினைச்சபடியே நடக்கும். எதிரிகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படுற நெற்கடிகள் விளகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும் நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலைகள் நடக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசாங்க வேலை செய்றவங்களுக்கு எல்லாமே சாதகமாக இருக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சனி பகவான் இதுவரைக்கும் உங்களுக்கு கொடுத்துட்டு வந்த நெருக்கடிகளை விளக்குறாருங்க. வருமானத்தை பல வழிகளை ஏற்படுத்தி கொடுக்கிறார். உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிப்படும். எவ்வளவு நெருக்கடி
16:02 ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகும். குடும்பத்தில உங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு புதுசா சொத்து சேரும். குறிப்பா வண்டி வாகனங்கள் எல்லாம் வாங்கி உங்க வசதிகளை பெருக்கி கொள்ள போறீங்க. பெரிய மனுஷங்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்க நினைச்ச வேலையை அவங்களை வச்சு நடத்திக்க போறீங்க. கோவில் வழிபாட்டில் ஈடுபடுவீங்க. மாணவர்களை பொறுத்தவரைக்கும் மாதத்துடைய பிற்பகுதியில படிப்புல ஆர்வம் அதிகரிக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்னு பார்த்தோம்னா நவம்பர் 22 23 டிசம்பர்ல 4 13 14 உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம் அப்படிங்கறது அணு தினமும் துர்க்கை யம்மனை வழிபாடு செய்ய கைவிட்ட காரியங்கள் கூட உங்க கைக்கு வந்து சேரும். வாழ்க்கையில வளம் உண்டாகும். அடுத்ததா புனர்பூச நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம். ஓகேங்களா நீங்க வந்து அடுத்தவங்களுடைய மனசை புரிஞ்சுக்கிட்டு
16:49 நடக்கக்கூடிய உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமா பிறந்திருக்கு. குருபகவானுடைய வக்கரம் அப்படிங்கறது வீண் செலவுகளை கட்டுக்குள்ள வைக்கும். அழைச்சல்களை குறைக்கும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மாதம் முழுவதுமே சூரிய பகவான் உங்களுக்கு முன்னேற்றமான பலன்களை அள்ளி கொடுக்கிறார். சாதகமான அமைப்பில சஞ்சரிக்கிறார். எல்லா வகையிலயுமே உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் திறமைகள் வெளிப்படும் வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் இல்லாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில இருந்து வந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பாக்கிய ஸ்தானத்தில ஆட்சியாக சஞ்சரிக்கக்கூடிய சனி பகவானுடைய பார்வை அப்படிங்கறது உங்க ராசிக்கு மூன்றுஆறு 11 ஆம் இடம் இந்த மூன்று இடத்தில விழுகிறதுனால தைரியமா இருக்க போறீங்க தன்னம்பிக்கை அதிகரிக்கும் பாதிப்புகள் விளகும் வம்பு வழக்குகள் எல்லாமே உங்களுக்கு சாதகமாக மாறும் வருமானம் அப்படிங்கறது பல வழிகள்ல் வர ஆரம்பிக்கும். குறிப்பா தெய்வ அருளும்
17:35 பெரியவருடைய அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். தடைபட்ட வேலை கூட கடகடனும் நடக்கும். மாதத்துடைய பிற்பகுதியில உங்களுடைய ராசிநாதன் வக்கர நிவர்த்தி அடையறதுனால புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வங்கில நீங்க கேட்டிருந்த பணம் கைக்கோறும். புதுசா இடம் வாங்குவீங்க. வீடு வாங்குவீங்க. நீங்க தொடங்கக்கூடிய எல்லா வேலையுமே பொன்னாக மாறும். உங்க முயற்சிகள் எல்லாமே வெற்றியாக மாறும். நினைச்ச வேலைகள் நடக்கும். குடும்பத்தில இருந்த நெருக்கடிகள் விலகும். ஒரு சிலர் வந்து புதுசா தொழில் தொடங்குவீங்க. வேலைக்காக காத்துட்டு இருந்து இருந்தவங்களுக்கு நீங்க எதிர்பார்த்த தகவலோடு நல்ல வேலை கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீங்க. நினைச்சதை சாதிக்க முடியும். அந்த அளவுக்கு வலிமை உண்டாகும். ஒரு சிலருக்கு புதுசா வண்டி வாகனம் வாங்கி வசதிகளை பெருக்கி கொள்ள போறீங்க. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்து இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சின்ன சின்ன வியாபாரம் செய்றவங்களுக்கு
18:21 உழைப்பாளர்களுக்கு வாழ்க்கையில முன்னேற்றம் ஏற்படும். இந்த கூலி வேலை செய்றவங்களுக்கு கூட வாழ்க்கையில முன்னேற்றம் உண்டு. மாணவர்களை பொறுத்தவரைக்கும் மாதத்துடைய முட்பகுதியில சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் பிற்பகுதியில படிப்புல அக்கரை அதிகரிக்கும். உங்களை பொறுத்தவரைக்கும் சந்திராஷ்டமம் நாட்கள்ல எங்கும் கவனம் எதிலும் கவனம். இதுவே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாட்கள்னு பார்த்தோம்னா நவம்பர் மாதம் 230 டிசம்பர்ல 3 5 12 14 இந்த நாட்களை சுப நிகழ்ச்சியுடைய தொடக்கத்துக்கு பயன்படுத்துங்க அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களை பொறுத்தவரைக்கும் அணு தினமும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் நரசிமரை வழிபாடு செய்ய நன்மைகள் அதிகரிக்கும். ஆக மொத்தத்துல மிதுன ராசியை பொறுத்தவரைக்கும் இந்த கார்த்திகை மாதம் அப்படிங்கறது உங்களுக்கு கை கொடுத்து தூக்கி விடக்கூடிய மாதமா பிறந்திருக்கு. ஒரு சிலர் சொல்லுவாங்க இல்லையா கடவுள் என் பக்கத்துல இருக்காருன்னு மிதுன ராசிக்காரங்க இப்படி நீங்க சொல்லுங்க யாரெல்லாம் உங்கள வந்து ஏழனமா பேசினாங்களோ யாரெல்லாம் உங்கள வந்து
19:06 கஷ்டப்படுத்துனாங்களோ அவங்களுக்கு முன்னாடி கடவுளுடைய அனுக்கிரகத்தினால நல்ல நிலைக்கு வர போறீங்க நல்லதே நடக்கப்போகுது கடவுள் உங்க பக்கத்துல இருக்காருங்க உங்க கையை கெட்டியா பிடிச்சிட்டு நிக்கிறாரு நீங்களும் விட்றாதீங்க முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்க ஒவ்வொரு நட்சத்திரமும் எந்தெந்த தெய்வத்தை வழிபாடு செய்யணும் நம்ம பேசி இருக்கோம் என்ன பரிகாரம் பண்ணனும்ங்கறதையும் நான் சொல்லி இருக்கேங்க அதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க பெருசா நீங்க ஒத்த பைசா செலவு பண்ண வேணாம். கடவுளை நம்புங்க. முழுமையான பக்திக்கு முழுமையான பலன் உண்டு. யார் யாரையோ நம்பி ஏமாந்திருக்கோம். கடவுளை நம்புங்க நல்ல மாற்றம் வரும். அதுவே உங்களுக்கு வாழ்க்கைக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா வீடியோக்கு ஒரு லைக் பண்ணுங்க. நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. மேலும் பிடிச்சிருந்தா பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு ஷேர் பண்ணுங்க. நம்ம சொல்லக்கூடிய அனைத்து தகவல்களும் பொது பலன்கள். உங்களுடைய தனிப்பட்ட ஜனன ஜாதகத்தை பொறுத்து சிறிதளவு மாறுபடும். வந்த கஷ்டம் கரையட்டும்
19:53 வரக்கூடிய கஷ்டம் விளகட்டும். கடவுள் உங்களுக்கு துணை வரட்டுங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்